உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் வாங்க தங்கமான நேரம்: இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2360 சரிவு

தங்கம் வாங்க தங்கமான நேரம்: இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2360 சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. இன்று ஒரேநாளில் சவரன் ரூ.2360 குறைந்து விற்பனையானது.தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் அண்மைக்காலமாக ஆச்சரிய மாற்றங்கள் காணப்படுகின்றன. விலை நிலவரத்தில் ஏற்றம், இறக்கங்கள் நிலவுவதே அதற்கு காரணம்.இந் நிலையில் இன்று மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. காலையில் ஒரு சவரன் ரூ.1320 குறைந்து ரூ.71,040க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.8880 ஆக இருந்தது.தற்போது இன்று மாலையிலும் தங்கம் விலை சரிந்துள்ளது. அதன்படி, இரண்டாவது முறையாக இன்று ஒரே நாளில் மேலும் ரூ.1040 குறைந்து, சவரன் ரூ.70,000க்கும், ஒரு கிராம் ரூ.8750க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கடும் விலை சரிவை தொடர்ந்து சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதாக நகை வியாபாரிகள் கூறி உள்ளனர். இந்த விலை மாற்றம், அடுத்து வரக்கூடிய நாட்களில் எப்படி இருக்கும் என்பது போக போக தெரிய வரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ