உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3வது நாளாக இன்றும் ஏற்றம்; சவரன் 58,000 ரூபாயை கடந்தது தங்கம்!

3வது நாளாக இன்றும் ஏற்றம்; சவரன் 58,000 ரூபாயை கடந்தது தங்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, சவரன் 58,000 ரூபாயை கடந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, நாள்தோறும் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சீராக விலை இறங்குவதுமாக இருந்தது. இந்நிலையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.58,280 ஆக இருக்கிறது. ஒரு கிராம் 80 ரூபாய் உயர்ந்து, ரூ.7,285 ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை ஏறுமுகத்தில் இருப்பது, பெண்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 10 நாட்களில் (டிச.1 முதல் டிச.10) வரை தங்கம் விலை நிலவரம் வருமாறு; டிச.1 - ரூ.57,200 டிச.2 - ரூ.56,720 டிச.3 - ரூ.57,040 டிச 4 - ரூ.57,040 டிச. 5 - ரூ.57,120 டிச.6 - ரூ.56,920 டிச.7 - ரூ.56,920 டிச.8 - ரூ.56,920 டிச.9 - ரூ.57,040 டிச.10 - ரூ.57,640


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
டிச 11, 2024 22:32

தங்கம் விலை ஏற்றத்திற்கும் திமுக அரசு தான் காரணம் என்று உருட்ட ஒரு சங்கியும் வரவில்லையே!


R S BALA
டிச 11, 2024 11:10

தங்கம் விலை எப்போதும் ஏறுவதே நன்று.. அதிக விலை இறக்கம் பொருளாதார நன்மை தராது


Narayanan
டிச 11, 2024 11:01

பெண்களுக்கு ஒரு வேண்டுகோள் . தயவு செய்து தங்கத்தின் மேல் மோகம் கொள்ளாதீர்கள். அனைத்து வியாபாரமும் அரசியல் உள்பட பெண்களை குறிவைத்தே நடக்கிறது . புரிந்துகொள்ளுங்கள்


முக்கிய வீடியோ