உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபரணத் தங்கம் இன்றே ஒரே நாளில் இருமுறை எகிறியது; சவரன் ரூ.1680 அதிகரித்து விற்பனை

ஆபரணத் தங்கம் இன்றே ஒரே நாளில் இருமுறை எகிறியது; சவரன் ரூ.1680 அதிகரித்து விற்பனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (டிசம்பர் 27) ஆபரணத் தங்கம் காலையில் சவரனுக்கு ரூ.880ம், மாலையில் ரூ.800ம் உயர்ந்தது. இன்று ஒரேநாளில் மட்டும் ஆபரணத் தங்கம் ரூ.1680 ரூபாய் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8wuwf754&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 25) ஆபரண தங்கம் கிராம் 12 ஆயிரத்து 820 ரூபாய்க்கும், சவரன்,ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (டிசம்பர் 26) தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 12 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனையானது, . கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. காலையில் அதிகரித்தது போலவே, மாலையிலும் ஆபரணத் தங்கம் விலை ஏற்றம் கண்டது. கிராமுக்கு ரூ.100 என்ற வீதத்தில் சவரன் ரூ.800 உயர்ந்து விற்பனையானது. ஒரு கிராம் ரூ. 13,100 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,04,800 ஆகவும் உள்ளது. காலை மற்றும் மாலை என இருமுறை இன்று ஒரேநாளில் மட்டும் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1680 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சுரேஷ் பாபு
டிச 27, 2025 18:41

ஆஹா, விடியல் கட்சி தேர்தல் வாக்குறுதிக்கு பாயிண்ட் கிடைத்து விட்டது! 1) தங்கம் விலையை ஒரு கிராம் ரூபாய் ஐந்தாயிரம் என்று குறைப்போம். 2) வெள்ளி விலை கிராம் ரூபாய் நூறு என்று குறைப்போம். நல்ல ஐடியா!!


அரவழகன்
டிச 27, 2025 18:41

அது அது வழியில் போகட்டும் நாம் ஒதுங்கி போவோம்...


Kalyan Singapore
டிச 27, 2025 15:00

இப்போது உலக நாடுகள் அமெரிக்கா டாலரில் நம்பிக்கை இழந்து நன்றி டொனால்ட் டிரம்ப் , ஜோ பைடேன் தங்கத்தை டன் கணக்கில் வாங்க ஆரம்பித்து விட்டன . அதனால் உலக வங்கியில் தங்கம் விலை கிடு கிடு என உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் 2030 க்குள் 30 ஆயிரத்தை தொடலாம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் . வீடு நிலம் வாங்குவதை விட்டு விட்டு தங்கம் வாங்குவது சாலச்சிறந்தது என்கின்றனர் அவர்கள்.


A.Gomathinayagam
டிச 27, 2025 14:00

ஏழை மற்றும் மத்தியதர மக்கள் தங்கம் மற்றும் வெள்ளியை தங்கள் வாழ்வியலில் இருந்து நீக்கி விடலாம் ,திருமணங்கள் இனி இரண்டு மாலை மற்றும் பதிவுடன் முடித்துவிடலாம் .லட்சங்கள் மிச்சம் .கடன் அற்ற வாழ்வு வாழலாம் .மன நிம்மதி மகிழ்ச்சி


பெரிய ராசு
டிச 27, 2025 12:33

வெள்ளி போடுங்க தங்கத்தை வாங்காதீங்க


Loganathan Kuttuva
டிச 27, 2025 10:38

ஒரு மில்லிகிராம் 12.82 ரூபாய் .மோதிரம் வளையல் அணிந்தவர்கள் கடினமான வேலைகளை செய்து தேய்த்து விடாதீர்கள் .


Vasan
டிச 27, 2025 12:27

என்னது, 1 கிலோ தங்கத்தின் விலை 1.28 கோடி ரூபாயா ?


சமீபத்திய செய்தி