மேலும் செய்திகள்
அரசு பஸ் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்
28-Apr-2025
கோவை: வால்பாறை அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர். திருப்பூரில் இருந்து கோவை மாவட்டம் வால்பாறையை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்றிரவு சென்றுள்ளது. நள்ளிரவு 2.50 மணிக்கு கவர்கள் என்ற பகுதியில் 33வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பஸ்ஸில் பயணித்த 49 பயணிகள் பலத்த காயமடைந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7jrcmmom&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த வருகின்றனர். பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், வால்பாறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்ஸை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
28-Apr-2025