உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது: பயணிகள் அதிர்ச்சி

அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது: பயணிகள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே ஓடிக் கொண்டிருந்த அரசு பஸ்சில், சக்கரம் கழன்று தேசிய நெடுஞ்சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.கள்ளக்குறிச்சியில் இருந்து நேற்று மாலை, 6:00 மணியளவில், அரசு பஸ் ஒன்று, 22 பயணியருடன் கடலுார் சென்றது. டிரைவர் தனசேகரன், கண்டக்டர் குபேரசெல்வம் பணியில் இருந்தனர். தியாகதுருகம் அடுத்த பிரதிவிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென பஸ்சின் முன்பக்க சக்கரம் கழன்று, தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. இதனால் பதற்றமான டிரைவர், பிரேக் போட்டு பஸ்சை நிறுத்த முயன்றார்.அப்போது, பஸ் ஒருபுறமாக சாய்ந்து, சாலையில் தேய்த்தபடி சிறிது துாரம் ஓடி நின்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கழன்று ஓடிய சக்கரம், 100 அடி துாரத்தில் சாலையோர பள்ளத்தில் விழுந்தது.அந்த நேரத்தில் சாலையில் யாரும் வராததால் பாதிப்பு இல்லை. தியாகதுருகம் போலீசார், பயணியரை பத்திரமாக மற்றொரு பஸ்சில் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

theruvasagan
ஏப் 21, 2025 17:38

தென்பாண்டிச் சீமையிலே. பஸ் டயரோடும் வீதியிலே. யார் அடிச்சாரோ. கமிஷன் யாரடிச்சாரோ.


Sankar
ஏப் 21, 2025 17:13

நான் திருச்சியில் 15 வருடம் Salem கோவையில் 15 வருடம் நகர பேருந்துகளில் பயணம் செய்த்துள்ளேன் ஒரு முறை கூட பிரேக்டௌன் என்று இறங்கியதில்லை .சென்னையில் 20 வருடத்தில் 25 முறை இறங்கி வேறு பேருந்தில் பயணித்த்து இருப்பேன் .அரசாங்க பஸ் என்றால் ஏன் தரக்கட்டுப்பாடு illai.


Narayanan
ஏப் 21, 2025 17:00

தமிழக அரசே கட்டுபாடின்றித்தானே ஓடுகிறது ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 21, 2025 16:56

நல்ல வேளை சக்கரம் கழன்றதால் பஸ் ரோட்டில் உராசியபடி நின்றது. இதுவே ஸ்டியரிங் கழன்று இருந்தால் என்னவாகி இருக்கும். பொறுத்து இருந்து பார்போம் இதற்கும் கூடிய விரைவில் பதில் கிடைக்கலாம்.


theruvasagan
ஏப் 21, 2025 16:56

யானை வரும் முன்னே. மணியோசை வரும் பின்னேன்னு அட்டகாசமா பழமொழி சொன்னது ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடி. இப்ப புதுமொழி இப்படி. மாடல் ஆட்சியில் பஸ் சக்கரம் வரும் முன்னே. பஸ் வரும் பின்னே.


Yaro Oruvan
ஏப் 21, 2025 14:13

திராவிஷ மாடல் பஸ்


பாமரன்
ஏப் 21, 2025 13:34

படத்தை பார்த்தால் சென்டர் மீடியன் மீது வலது முன் சக்கரம் ஏறியதால் இடது சக்கரம் கழண்டு சென்றிருப்பது போல தெரிகிறது. இதை டிரைவர் அஜாக்கிரதை அல்லது டயர் வெடிப்பால் இருக்கலாம்.. புதிய பஸ் லேலண்ட் வாரண்ட்டில இருக்கும்... தகுந்த விசாரணை செய்யனும்... பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது நிச்சயம். ஆங் டீம்கா ஒயிக


Yaro Oruvan
ஏப் 21, 2025 14:10

அடடா அடடடடா.. அடடடடடா.. மண்டி போட்டு முட்டு கொடுக்கும் நம்ம உப்பிக்கி ஒரு பத்து ஓவா போட்டு 210 ஆ குடுத்துடுங்கடா.. பாவம் முட்டி தேய தேய மண்டி போட்டு வேலை செய்றான்


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 21, 2025 17:14

இது பஸ் ன்னு கண்டுபுடிச்சது யாருங்க உபியா ? பழைய டப்பா தானுங்க புது பெயிண்ட்ல வந்திருக்கு . ஒருவேளை பில்லு புதிய பஸ்க்காக இருக்கலாம்.


Ramesh Sargam
ஏப் 21, 2025 12:33

இந்த செய்தி தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தெரியுமா? இல்லையென்றால் உடனே தெரியப்படுத்தவும். புது பஸ் வாங்க நிதி தருவார்களோ இல்லையோ தெரியாது, ஆனால் காயம் அடைந்தவர்களுக்கு கட்டாயம் வீடு தேடி வந்து நிவாரண நிதி கொடுப்பார்கள். அப்பத்தான் அடுத்த தேர்தலில் அவர்கள் குடும்ப வோட்டு இவர்களுக்கு கிடைக்கும்.


S.SRINIVASAN
ஏப் 21, 2025 11:33

இதுதான் இன்றைய திராவிட மாடல் அரசின் நிலைமை. பொதுமக்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை போனவாரம் இதே கலரில் உள்ள பஸ் ஒன்று விழுப்புரம் சென்னை நெடுஞ்சாலையில் பிரேக் பிடிக்காமல் காரில் முட்டி நின்றது. கேட்டால் நிர்வாக அலுவலர்களிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. இந்த நிர்வாக திறமையற்ற ஆட்சியில் நடக்கும் ஊழல் தினந்தோறும் மக்களின் பாதுகாப்பு குறைப்பாட்டினால் வெளிக்கொணரப்படுகிறது.


V RAMASWAMY
ஏப் 21, 2025 10:52

லஞ்சக் கொள்ளை அடிப்பதற்கே நேரம் போதாதபோது, பராமரிப்பிற்கு திராவிட மோதலில் ஏது நேரம் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை