உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கையேடு தயாரிக்க 4 மாதமாக ஆள் தேடுகிறது அரசு துறை; ரூ.3,838 கோடி திட்டம் தாமதம்

 கையேடு தயாரிக்க 4 மாதமாக ஆள் தேடுகிறது அரசு துறை; ரூ.3,838 கோடி திட்டம் தாமதம்

சென்னை: உலக வங்கி நிதியில், 3,838 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட, நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டு திட்டங்களுக்கான கையேடு தயாரிக்க, கலந்தாலோசகர் தேடல் நான்கு மாதமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு திட்டம், நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டு திட்டங்களுக்கு, உ லக வங்கியிடம் நிதி பெற முடிவு செய்யப்பட்டது. இதில், நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டு திட்டத்தை, 3,838 கோடி ரூபாயில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், 2,490 கோடி ரூபாய் உலக வங்கியிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், அடிப்படை சேவைகளை மேம்படுத்த தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இதில் உருவாக்கப்படும். முதல் கட்டமாக, மாநகராட்சிகள், நகராட்சிகள் என, 21 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப் பட்டன. இத்திட்டத்தை செயல் படுத்தும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சிகளில் பொறியாளர்களுக்கான கையேடு தயாரிக்க திட்டமிடப்பட்டது. பணிகளை மேற்கொள்வதில், ஒரே சீரான அணுகு முறையை ஏற்படுத்த, இந்த கையேடு அவசியமாகிறது. இது குறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டு திட்டம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையால் உருவாக்கப்பட்டாலும், நகராட்சி நிர்வாகத்துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பொறியாளர்கள் பணியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, கையேடு தயாரிக்க திட்டமிடப்பட்டது. உலக வங்கி வழிகாட்டுதல் அடிப்படையில், இந்த கையேடு தயாரிக்க, கலந்தாலோசகர் தேர்வு செய்ய, சில மாதங்களுக்கு முன், 'டெண்டர்' வெளியிடப்பட்டது. தகுதியான நிறுவனங்கள் எதுவும் இதில் பங்கேற்க முன்வரவில்லை. இதனால், மீண்டும் மீண்டும் கலந்தாலோசகர் தேடலுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறோம். விரைவில் இந்த தேடல் முடிவுக்கு வந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை