உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு டாக்டர் பணி நீக்கம்; ரூ 40 லட்சம் அபராதமும் விதித்தது மனித உரிமைகள் ஆணையம்!

அரசு டாக்டர் பணி நீக்கம்; ரூ 40 லட்சம் அபராதமும் விதித்தது மனித உரிமைகள் ஆணையம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவில்பட்டி: அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்ணை, தன் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்த அரசு டாக்டர் பிரபாகரனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதித்து, மனித உரிமைகள் ஆணையம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் மனைவி ஜெயா 2018ல் தீக்காயமுற்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அரசு மருத்துவராக பணிபுரிந்த பிரபாகரன் தனது தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். பல நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அந்தப் பெண் உயிரிழந்தார்.அவரது கணவர் ராணுவ வீரர் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், இன்று (மே 19) மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு பின்வருமாறு:* ராணுவ வீரர் கருப்பசாமிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த தொகையை டாக்டர் பிரபாகர் ரூ.40 லட்சமும், டாக்டர் வெங்கடேஸ்வரன் ரூ.2 லட்சமும், ஊழியர்கள் குமரேஸ்வரி, குரு லட்சுமி தலா ரூ.1 லட்சமும், தமிழக அரசு ரூ.6 லட்சமும் வழங்க வேண்டும்.* டாக்டர் பிரபாகரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்; மீண்டும் அரசு பணியில் நியமிக்கக் கூடாது. அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.* அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவதை கண்காணிக்க வேண்டும்.* அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும்.இவ்வாறு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

N Annamalai
மே 21, 2025 14:17

இதில் ஒன்று நடந்தாலும் தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி விடலாம் .ஒன்று கூட நடக்காது .இதை நம்பி கடன் வாங்க வேண்டாம்


முதல் தமிழன்
மே 19, 2025 21:50

உச்ச நீதி மன்றம் என்ன சொல்லுகிறதோ அதுதான் இறுதி. மற்றபடி ஒன்றும் ஆகப்போவதில்லை.


VSMani
மே 19, 2025 18:33

எல்லா அரசு டாக்டர்களும் தனியார் மருத்துவமனை வைத்திருக்கிறார்கள் அல்லது வீட்டில் கிளினிக் வைத்திருக்கிறார்கள். அரசு மருத்துவ மனையில் அசுரர்கள் போல் காட்டமாக பேசுவார்கள் ஆனால் அவர்கள் கிளினிக் போனால் சாந்த சுரபி போல் நடந்துகொள்வார்கள்.


உண்மை கசக்கும்
மே 19, 2025 17:28

ஒரு அபராதமும் கிடைக்காது. வாக்கு தேவை இன்னும் 10 மாதத்தில். அரசு எல்லா துவாரங்களையும் மூடி கொள்ளும்.


panneer selvam
மே 19, 2025 17:21

I do not think Human Right Commission does have judicial authority like regular court . They may levy penalty and make recommendation to government for any further action . but implementation of their recommendation is not mandatory . It is left the choice of government


நாஞ்சில் நாடோடி
மே 19, 2025 16:46

தி மு க ஆட்சியில் அரசு மருத்துவமனையில் வேலைபார்க்கும் அனைத்து டாக்டற்களும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கின்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்களை தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர். எலவசத்துக்கு ஆசைபட்ட தமிழன் தவறான ஆட்சியை தேர்ந்தெடுத்துவிட்டான்...


Sreenivas Jeyaraman
மே 19, 2025 19:45

கட்சி சார்ந்த விஷயம் என பார்க்க முடியாது...பல ஆண்டுகளாக எந்த கட்சியும் இதில் விலக்கு இல்லை..‌ பொதுவான தேவைப்படும் சில விதிமுறைகள் முறைபடுத்துவதன் மூலம் மருத்துவர்களின் சேவையும் பாதுகாக்கப்பட வைப்பதே ..இன்றைய தீர்வாகும்..


Shankar
மே 19, 2025 15:52

மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது எல்லாமே சரிதான். ஆனால், இதை எல்லாம் விடியா அரசு செயல்படுத்துமா என்பதுதான் சந்தேகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை