உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றவாளிகளுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

குற்றவாளிகளுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருத்தணியில் வட மாநில வாலிபர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, வியாபாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு தமிழக அரசு ஊக்கம் அளிப்பதால் தான் இப்படி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வட மாநில இளைஞர் சுராஜ் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறாத நிலையில், திருத்தணியில் நேற்று மற்றொரு வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜமால் என்ற உள்ளூர் தொழிலதிபர், எந்தவித காரணமும் இன்றி ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இது இனி ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இது ஒரு கவலைக்குரிய போக்காக மாறியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. குற்றவாளிகளுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது. https://x.com/annamalai_k/status/2006240021721014482?s=20சாதாரண குடிமக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியின் கீழ், பொதுப் பாதுகாப்பு சீர்குலைந்துவிட்டது. சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தனது முழுமையான தோல்வியை திமுக ஒப்புக்கொள்வதற்கு முன்பு, இன்னும் எத்தனை பேர்பாதிக்கப்பட வேண்டும்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

P.M.E.Raj
டிச 31, 2025 13:19

திமுக ஒரு ரவுடிகள் கட்சி. ஸ்டாலினுக்கோ ஆட்சி செய்ய கொஞ்சம்கூட தெரியவில்லை.


sundarsvpr
டிச 31, 2025 13:16

ஜனப்பெருக்கம் கூட கூட குற்றங்களும் கூடுவது தவிர்க்கஇயலாது. கையூட்டலும் வன்மையும் கூடுதலாய் இருக்கும். இதனை கட்டுப்படுத்த வருவாய் துறை வணிகத்துறை காவல் பொதுப்பணி துறைகளில் நேர்மையான நபர்கள் தேவை. இந்த துறைகளில் வகுப்புவாரி நியமனங்கள் தவிர்த்தல் அவசியம். நேர்மையான 100% தாழ்த்தப்பட்டவர் இருந்தாலும் தவறு இல்லை. மாணவர்கள் இடையே மாரல் வகுப்பு அவசியம் இதில் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த மேல் வகுப்புக்கு செல்லமுடியும் என்பதும் அவசியம்


Ragukkumar T
டிச 31, 2025 13:15

வந்துட்டார் உத்தமர்


Madras Madra
டிச 31, 2025 12:52

குற்றவாளிகளால் குற்றவாளிகளுடன் குற்றவாளிகளுக்காக தமிழ் நாட்டில் இயங்கும் ஒரே கட்சி


Barakat Ali
டிச 31, 2025 13:11

அதுதான் திராவிட மாடல் .......


Senthoora
டிச 31, 2025 13:16

நீங்க உபி, குஜராத் பக்கம் போய் பாருங்க குற்றவாளிகளை ஜெயிலில் இருந்து தண்டனைக்கு முன்பே விடுவித்து தாரைதப்பட்டை அடித்து வரவேற்று, சிலருக்கு அமைச்சர் பதவியே கொடுக்கிறாங்க, அதையும் சேர்த்து சொல்லலாம் அல்லே.


N S
டிச 31, 2025 12:51

தன்னிகரில்லா தரணி போற்றும் திராவிட மாடல் தந்த அப்பாவின் வழிகாட்டுதலில், அவரது கட்டுப்பாடில் உள்ள போலீசாருக்கு, நகரின் சத்துக்களில் வந்து துாய்மை பணியாளர்கள் தொல்லை தருவதை தலைநகரிலேயே சரியாக கட்டுப்படுத்த முடியவில்லை. "யாரும் எங்கள் மீது துளியும் அக்கறை காட்டவில்லை" என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கும் இந்நேரத்தில், எங்கோ யாரோ அடித்துக்கொள்ளும் விஷயங்களுக்கு எப்படி பொறுப்பேற்க முடியும்?


Narasimhan
டிச 31, 2025 12:49

உச்ச நீதி மன்றம் பார்த்துக்கொள்ளும் என்ற தைரியம்தான்


vivek
டிச 31, 2025 12:45

உண்மைய சொன்னா திராவிட சொம்புகளுக்கு அல்லு விடுது


Senthoora
டிச 31, 2025 13:20

என்ன கரிசனை, எப்படியும் ஆட்சியை பிடிக்கனும், அதே கொள்ளையை நாமளும் அடிக்கணும், தமிழக மக்கள் ஏமாளிகள் என்று...


திகழ்ஓவியன்
டிச 31, 2025 12:41

குற்றவாளி அதிகம் உள்ள கட்சியே அலறுகிறது .....


திகழ்ஓவியன்
டிச 31, 2025 12:39

பாவம் இருப்பை தெரிவிக்க தினம் ஒரு அறிக்கை இல்லை பேட்டி பிழைக்க தெரிந்த படிச்ச மேதை


தமிழன்
டிச 31, 2025 13:09

காமடி பீசு


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ