உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு டிரில்லியன் டாலர் இலக்குடன் அரசு முன்னேறி வருகிறது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

ஒரு டிரில்லியன் டாலர் இலக்குடன் அரசு முன்னேறி வருகிறது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானத்தில் பறந்து செல்லும் நேரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். திமுக ஆட்சியில் தமிழகம் இரட்டை இலக்கத்திலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாநிலமாகவும், வேலைவாய்ப்புகளை 15% வழங்கும் இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது என்கிற மத்திய அரசின் புள்ளிவிவரங்களை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=khxjf1j1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஒரு டிரில்லியன் டாலர்

ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் பெரும் பங்களிப்பைச் செலுத்தி வரும் நிலையில், ஜெர்மனி நாட்டில் உள்ள இந்திய அதிகாரிகளின் வரவேற்பு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. அந்த மகிழ்ச்சியுடன் டசெல்டோர்ப் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது ஓர் இன்ப அதிர்ச்சி. அந்தப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நின்று வரவேற்பளித்தனர். சென்னையில் இருந்தாலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தாலும், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு வந்தாலும் காலை நேரத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்வதை உங்களில் ஒருவனான நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். எந்த நாட்டில், எந்த நகரில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழகத்தை தான் சுற்றிச் சுழல்கிறது.

விமர்சனங்கள்

வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழகத்தில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டது.காலையில் நடந்த நிறுவனங்களுடனான சந்திப்பு, மாலையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

வளர்ச்சி

திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள தமிழர்களின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கிறோம். லண்டனிலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு. அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் லண்டன் தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Ramesh Sargam
செப் 04, 2025 10:48

போரப்போக்கை பார்த்தால் தமிழக முதல்வர் முதலீடாக அள்ளிக்கொண்டு வருவது அதிகமாகி, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் கடனாக கொடுப்பார் போல தோன்றுகிறது. ஆஹா... எப்பேர்ப்பட்ட முதல்வர் தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கிறார்.


Ramesh Sargam
செப் 04, 2025 10:04

ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை பூஜ்யம் தெரியுமா முதல்வரே? தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏன் என்றால் வருடத்திற்கு ஒரு சில நாடுகள் செல்கிறார் முதல்வர் முதலீடு ஈட்ட என்று புளுகிவிட்டு ஆனால் இங்கே தமிழகத்தில் சுருட்டியதை அங்கே ட்ரில்லியன் கணக்கில் அங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்ய செல்கிறார் முதல்வர். ஆகையால் ஒரு ட்ரில்லியனுக்கு எவ்வளவு பூஜ்ஜியம் என்று அவருக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது.


அப்பாவி
செப் 03, 2025 22:33

நீங்க ஒரு டிரில்லியன். ஒன்றியம் எட்டு டிரில்லியன். சின்ராசு உன்காட்டுல மழைடா. உன்னை யாரும் ஒண்ணும் பண்ண முடியாதுடா.


theruvasagan
செப் 03, 2025 22:11

ஒரே டிரில்லியனில் 30 சதவிகிதம் என்றால் எவ்வளவு தேறும் என்று கணக்கு போட்டு சொல்லியிருப்பாங்க. அந்த உற்சாகத்தில்தான் எங்க போனாலும் டிரில்லியன் டாலர் நாம ஸ்மரணை.


Venugopal S
செப் 03, 2025 21:02

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற அளவை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைய தமிழக முதல்வர் உறுதி எடுத்துள்ளார்.கடந்த ஆண்டில் தமிழக மாநில பொருளாதார அளவு முப்பது லட்சம் கோடி அளவை எட்டியுள்ளது.இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பதினோரு சதவீதம்.இதே அளவு வளர்ச்சியில் ஒரு டிரில்லியன் டாலர் அதாவது எண்பத்தெட்டு லட்சம் கோடி ரூபாய் அளவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடைவது சற்று கடினமானது தான்.ஆனால் நிச்சயமாக 2033 ஆம் ஆண்டில் அடைய முடியும்.இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக ஆவதற்கு தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றம் மிகவும் அவசியமாகும். தமிழகம் முன்னேற்றம் அடையாவிட்டால் இந்தியாவும் முன்னேற்றம் அடைய முடியாது என்ற உண்மை சங்கிகளுக்கு புரியாமல் இருப்பது துரதிருஷ்டம் தான்!


தஞ்சாவூர் மாமன்னர்
செப் 04, 2025 07:00

கோப்பால் ஒவ்வொரு தமிழனின் தலையில் 20 லட்சம் கடன். முதல்ல உங்க daleevarukku 15 லட்சம் க்கு எவ்ளோ சைபர் அப்டின்னு எழுதி குடு


Raghavan
செப் 03, 2025 20:39

ட்ரில்லியனுக்கு எவ்வளவு சைபர் என்றுகூட தெரியாது. இதில் அளந்து விடுகிறார் இவருக்கு எல்லாம் தெரிந்ததுபோல. இதையும் இந்த உப்பிஸ் கேட்டுக்கொண்டுஇருக்கிறது காலத்தின் கொடுமை. இவங்களும் திருந்தமாட்டார்கள் மக்களும் திருந்தமாட்டார்கள்.


சந்திரன்
செப் 03, 2025 20:18

நீ என்னபா பைத்தியம் என்ன வேணா பேசுவ என சீமான் சொன்னது யார


Rathna
செப் 03, 2025 20:09

இந்திய ரூபாய் மதிப்பில் 88 லக்ஷம் கோடி ரூபாய்... எங்கேயோ இடிக்கிறது..


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 03, 2025 19:47

பாஸ் 2022 அமீரகம் போயி 6200 கோடி ஒப்பந்தம், 8000 பேருக்கு வேலைன்னு பீலா உட்டீங்க , இப்போ தெருவுக்கு தெருவு லூலூ மால் தான் போங்க, சப்பான்ல போயி ,ஸ்பெயின் ல போயி, அமெரிக்கா போயி , சிங்கப்பூர் போயி , 1 டிரில்லியன் டாலர் தாண்டிடுச்சு , திராவிட மக்கள் 10 லக்சம் பேர் வேல கெடச்சிடுச்சி , அகா இந்தியா ஜிடிபி 4.5 டிரில்லியன் டாலர் நம்ம திராவிட நாடு மட்டம் 1 டிரில்லியன் டாலர் , நீங்க உண்மையான கர்த்தரின் ஸீடர்


தமிழ் மைந்தன்
செப் 03, 2025 19:35

சொந்த பணத்தை முதலீடு செய்ய மக்கள் பணத்தில் பயணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை