உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சார்பு நீதிமன்றங்களுக்கு கூடுதல் அதிகாரம் தர அரசு நடவடிக்கை

சார்பு நீதிமன்றங்களுக்கு கூடுதல் அதிகாரம் தர அரசு நடவடிக்கை

''சார்பு நீதிமன்றங்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க, மத்திய அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - கோவிந்தராஜன்: இதுவரை சார்பு நீதிமன்றங்களில் தீர்வு கண்ட வழக்குகளுக்கு, இப்போது மாவட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வழக்குகள் தாமதமாகின்றன. எனவே, சார்பு நீதிமன்றங்களிலேயே வழக்குகளை நடத்த வழி செய்ய வேண்டும்.அமைச்சர் ரகுபதி: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களின்படி, சார்பு நீதிமன்றங்களில் நடந்த வழக்குகள், மாவட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. சார்பு நீதிமன்றங்களுக்கு கூடுதல் கிடைக்க, மத்திய அரசுடன் பேசி, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ