உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அமைச்சர் நேரு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

 அமைச்சர் நேரு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தி.மு.க.,வைச் சேர்ந்த, அமைச்சர் நேரு கட்டுப்பாட்டில் உள்ள, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கடந்த 2024- - 25ம் ஆண்டுகளில் உதவி, இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட, 2,538 பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஒரு பதவிக்கு, 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை என, மொத்தம் 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்பதால், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரி, தமிழக டி.ஜி.பி.,க்கு, கடந்த அக்டோபரில் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில், இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் உரிய அனுமதிகளை பெற்று, வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட கோரி, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தமிழக அரசு, டி.ஜி.பி., மற்றும் அமலாக்கத் துறை, ஜனவரி 23ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

xyzabc
டிச 22, 2025 23:37

வேலை தேடி வரும் இளைஞர்களிடம் 30, 35 ல லஞ்சம் வாங்குவது அவர்கள் வயிறை அடிப்பது போல. அந்த பாவம் சும்மா விடாது. இந்த லஞ்ச பணத்தை எப்படி மீட்பது? அவர்களும் லஞ்சம் வாங்க தொடங்குகிறார்கள். தி மு க வின் கைவினை.


xyzabc
டிச 21, 2025 21:42

எல்லாரையும் ஏமாற்றி விடுவார்.


நிர்மல்குமார்
டிச 17, 2025 20:19

தகுதித்தேர்வு எழுதி காத்திருந்த படித்த இளைஞ‌ர்களின் வயிற்றில் அடிக்கிறது திமுக .


kamal 00
டிச 17, 2025 12:14

நேரு னா சும்மாவா திருச்சி யே திரளும் ஏனா அவ்வளவு கொத்தடிமை திருச்சில இருக்கானுக


Barakat Ali
டிச 17, 2025 11:20

இதே போன்ற வழக்கு மேற்குவங்க ஆசிரியர் பணியிட நிரப்புதல் தொடர்பாக வந்தது.. இதுவரை பிரச்னை தீரலை.. படிச்சு, தேர்வெழுதி வந்தவங்களுக்கு வூ வூ .....


bharathi
டிச 17, 2025 10:49

Nothing will happen lost confidence on Central government. They have no aim on controlling TN


Mohan
டிச 17, 2025 10:24

போங்கய்யா நீங்களும் உங்க சட்டமும் நீதியும் செந்தில் பாலாஜியை என்ன பண்ண முடுஞ்சுது , டாஸ்மாக் வழக்கு நிலை என்ன ..அதே மாதிரி தான் இதுவும் ..இந்தியா தண்டனை சட்டமும் நீதியும் இந்துக்களுக்கானவையோ, சாமானியர்களுக்கோ அல்ல ...நமக்கு நீதி கிடைக்காது ... சிறுபான்மையினரும் பணம் படைத்தவர்களும் எங்கும் எதுவும் செய்யலாம் ..இதுதான் விதி ...எங்க கொண்டு போயி விடப்போகுதோ ..


நசி
டிச 17, 2025 08:22

கவுண்டமனி சினிமா வரா மாதிரி விஜிலென்ஸ் அரசு எல்லாம் கோர்ட்டில்... பே..பே..பே.... என்று ஊமை‌பாஷை பேசுவார் .


Kasimani Baskaran
டிச 17, 2025 08:06

பழைய மாணவர் அணியில் அமைப்புச்செயலாளர் தவிர அனைவரும் பசையுள்ள துறைகளை ஆக்கிரமித்து புதிய மாணவர் அணியை தற்புகழ்ச்சியில் திளைக்க விட்டு விட்டார்கள். ஏற்கனவே வெதும்பிக்கொண்டு இருந்த பலர் தீம்க்காவை பல இடங்களில் போட்டுக்கொடுத்து இருக்கிறார்கள். ஆத்தா தீம்க்காவில் பயிற்சி எடுத்த நிபுணர்கள் ஓவராக செய்து பணம் சம்பாதித்துக்கொடுத்து சிக்கலில் மாட்டி விட்டு இருக்கிறார்கள். இனி தீம்க்கா மீள்வது சிரமம்.


Gopal
டிச 17, 2025 08:04

ஊழல் கும்பல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை