உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே அத்துமீறும் சம்பவம்; நயினார் நாகேந்திரன் காட்டம்

வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே அத்துமீறும் சம்பவம்; நயினார் நாகேந்திரன் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு, தவறான முறையில் சீண்டி பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக மாணவிகள் குற்றஞ்சாட்டி காணொளி வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பள்ளியில் புகார் அளித்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணையும் குறைத்துவிடுவர் என்று மாணவிகள் காணொளியில் பேசுவது அரசுப் பள்ளிகளில் பாலியல் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.https://x.com/NainarBJP/status/1959857535160312091வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கக் கூட திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லையா?ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கல்வி தரமாக இருக்காது என்ற தவறான எண்ணம் பொதுப்புத்தியில் இருக்கையில், தற்போது மாணவிகளுக்கு பாதுகாப்பும் இருக்காது என்று கருத்து உருவாகிவிடாதா? அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?'அப்பா' என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின், மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா? மேலும், தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Padmasridharan
ஆக 26, 2025 12:24

காக்கி சட்டை காவலர்கள் பாலியல் தொல்லைகள் கொடுப்பது இல்லையா, குடித்துவிட்டு ரோந்து செல்வதில்லயா. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களும், சமூகத்தில் காவலர்களும் சிறு பிள்ளைகளா சாமி. இவர்கள் செய்யும் குற்றங்களுக்கு கட்சி என்ன செய்யும். மற்ற கட்சியாட்கள் பள்ளிக்கூட்ங்களுக்கு சென்று குறைகளை கேளுங்கள். மதுவை ஒழியுங்கள்.


பேசும் தமிழன்
ஆக 26, 2025 09:03

இதெல்லாம் விடியாத ஆட்சியில் சகஜமாகி விட்டது.... நடக்கும் சம்பவங்களை தனித் தனியாக சொல்லி கொண்டு இருக்க முடியாது.


ராஜா
ஆக 26, 2025 08:51

வடக்கன் கிட்ட இருந்து ஆட்சியை பிடிக்க?


venugopal s
ஆக 25, 2025 18:33

இந்த மூஞ்சியை கடவுள் ராமர் போல் சித்தரித்து திருநெல்வேலியில் பாஜகவினர் வைத்த போஸ்டரைப் பார்த்து பயங்கரமாக சிரித்து சிரித்து வயிற்றுவலியே வந்து விட்டது!


என்னத்த சொல்ல
ஆக 25, 2025 17:37

அரசு பள்ளி ஆசிரியர் செய்த தவறுக்கு திமுகதான் காரணமா? அவர்மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசை குறை சொல்லலாம். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...


Narayanan
ஆக 25, 2025 15:14

நீதிக்கதைகள் பள்ளியிலும் / ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகளும் நிறுத்தி வாழ்வில் தவறுக்கு தண்டனை உண்டு என்ற நீதி மாற்றப்பட்டுவிட்டது இந்த திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் . பய உணர்வை நீக்கி , ஜாதீய அடிப்படையில் ஆசிரியர்கள் அமர்த்தப்படுவதாலும் இது போன்ற குற்றங்கள் கூடிக்கொண்டே போகிறது .


Svs Yaadum oore
ஆக 25, 2025 14:46

கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவன் போதை கம்பெனி நடத்தறவன் விடியல் ஆட்சியில் மந்திரி ...இந்த லட்சணத்தில் அரசாங்கம் ....இதில் வேலியே பயிரை மேய்ந்தது என்று கேள்வி கேட்டு அர்த்தமில்லை ....


Svs Yaadum oore
ஆக 25, 2025 14:42

அரசு பள்ளியில் கலாச்சார விழா என்ற போர்வையில் சினிமா பாடலுக்கு பள்ளி மாணவிகளை குத்தாட்டம் ஆட விட்டு அதை பதிவு செய்து வெளியிடும் பள்ளி கல்வித்துறை ....இந்த லட்சணத்தில் ஆட்சி நடக்குது ..இதுக்கு அப்பா என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் விடியல் என்ன நடவடிக்கை எடுப்பார் .....


தமிழ் மைந்தன்
ஆக 25, 2025 14:20

தலைவர்கள் எவ்வழியோ அதே வழியில் அவர்கள் அடிமைகளும்


Mario
ஆக 25, 2025 14:06

யாரு இவரு ? ஓ அந்த நாலு கோடி நாகேந்திரனா?


Palanisamy Sekar
ஆக 25, 2025 17:01

அறிவற்ற மூடனே அவர் சொல்வது உன் வீட்டு குழந்தைகளுக்கும் சேர்த்திதான். நீ திமுக கட்சியை சேர்ந்தவன் என்றால் உன் வீட்டு குழந்தைகளுக்கு இப்படி நடந்திருந்தால் கண்டுக்காம போயிடுவ போல.. நீயெல்லாம் கருத்து சொல்றேன்னு இங்கே இனி வந்துடாதே.


சமீபத்திய செய்தி