வாட்ஸாப் செயலியில் அரசின் சேவைகள் அமைச்சர் தியாகராஜன் தகவல்
சென்னை:சட்டசபையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்: 1 தற்போது, 266 ஆதார் பதிவு மையங்கள் செயல்படுகின்றன. ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில், உள்ளாட்சி அலுவலகங்களில் கூடுதலாக, 50 ஆதார் பதிவு மையங்களை எல்காட் ஏற்படுத்தும் 2 34,843 இ - சேவை மையங்கள் வாயிலாக, 260 சேவைகள் இணையதள வழியில் வழங்கப்படுகின்றன. இந்த சேவைகளை மக்கள் எளிதில் பெற, 3.85 கோடி ரூபாயில், முதல் கட்டமாக 50 சேவைகள், 'வாட்ஸாப்' செயலி வாயிலாக வழங்கப்படும். 3'ஆதார்' எண்ணுடன் இணைக்கப்பட்ட நலத்திட்டங்களை செயல்படுத்த, அனைத்து அரசு துறைகளுக்கும், பயனாளிகளின் 'இ - கே.ஒய்.சி.,' தேவைப்படுகிறது. மொபைல்போன் செயலி வாயிலாக முக அங்கீகாரம், கைரேகை, கருவிழி, ஓ.டி.பி., அடிப்படையில் பெற, பொதுவான, இ - கே.ஒய்.சி., மொபைல் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது 4அரசு துறைகளுக்கு, இ - கே.ஒய்.சி., சேவைகளை, இணையதளம் வழியாக வழங்கும் வகையில், மொபைல் செயலியுடன் இணைந்த, ஒரு ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்படும்5 தமிழ் இலக்கியம், மொழியியல் பயிலும் மாணவர்களுக்கு, மொழி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.