உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் கொள்முதலுக்கு புதிய ஆதார விலை  அரசு நிர்ணயம்

நெல் கொள்முதலுக்கு புதிய ஆதார விலை  அரசு நிர்ணயம்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நெல் கொள்முதல் சீசன் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து, மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகள் வாயிலாக கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. நடப்பு கொள்முதல் சீசன் நாளை துவங்குகிறது. இந்த சீசனில் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும், 100 கிலோ எடை உடைய குவின்டால் சன்னரக நெல்லுக்கு, 2,545 ரூபாய், பொதுரக நெல்லுக்கு, 2,500 ரூபாய், குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சன்னரக நெல்லுக்கான ஆதார விலையில், மத்திய அரசு, 2,389 ரூபாய், தமிழக அரசு ஊக்கத்தொகையாக, 156 ரூபாய் வழங்குகிறது. பொதுரக நெல்லுக்கு மத்திய அரசு, 2,369 ரூபாய், தமிழக அரசு 131 ரூபாய் வழங்குகிறது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை