உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசைத்தறி உரிமையாளர்கள் ஸ்டிரைக் அரசு தீர்வு காண வேண்டும்

விசைத்தறி உரிமையாளர்கள் ஸ்டிரைக் அரசு தீர்வு காண வேண்டும்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறி உரிமையாளர்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள். இவர்களை நம்பி, மறைமுகமாக பல லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.மூன்று முறை உயர்த்தப்பட்ட மின் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி, விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு இதற்கு தீர்வு காண வேண்டும்.- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை