உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாராய விற்பனையில் கவனத்தை திருப்பிய அரசு

சாராய விற்பனையில் கவனத்தை திருப்பிய அரசு

நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ., தீபாவளியையொட்டி, தமிழகத்தில், 789 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருப்பது, 'டாஸ்மாக்' மாடல் அரசின் கோர முகத்தை காட்டுகிறது. சாதாரண நாட்களிலேயே சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பண்டிகை நேரங்களில், ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடுமோ, என கடவுளிடம் வேண்டும் நிலை உள்ளது. ஆனால், தி.மு.க., அரசும், முதல்வர் ஸ்டாலினும், சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு. வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும் நேரத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மது விற்பனை உச்சம் பெற்றிருக்கிறது. அப்படியென்றால், அரசு இயந்திரத்தின் மொத்த கவனத்தையும், சாராய விற்பனையில் தான் தி.மு.க., அரசு திருப்பி இருக்கிறது என்பது தானே அர்த்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vasan
அக் 24, 2025 21:50

ஒவ்வொரு குடிகார மகனும் வெட்கப்பட வேண்டும். மகாத்மா காந்தி அவரது அன்னையாருக்கு சத்தியம் செய்து தவிர்த்த மது, மாது, மாமிசம் ஆகியவற்றை உங்களாலும் தவிர்க்க முடியாதா? ஏன் குடித்து, புத்தி மழுங்கி, சீரழிந்து போகிறீர்கள் ?


தலைவன்
அக் 24, 2025 16:17

திருநெல்வேலி சீமைக்கு வாசகர்கள் யாராவது வந்தால் முதலில் உங்களை வரவேற்பது நைனார் பார் என்கிற வாசகம்தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை