உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் சொந்த கருத்தை கூற கவர்னருக்கு உரிமை இல்லை: அப்பாவு

சட்டசபையில் சொந்த கருத்தை கூற கவர்னருக்கு உரிமை இல்லை: அப்பாவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “தமிழக சட்டசபையில், கவர்னர் ரவி ஜன., 6ம் தேதி உரையாற்ற உள்ளார். சட்டசபையில் உரையை வாசிக்க மட்டுமே, அவருக்கு உரிமை உண்டு; சொந்த கருத்தைக்கூற, உரிமை இல்லை,” என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தமிழக சட்டசபை கூட்டத்தை, வரும் 6ம் தேதி, கவர்னர் கூட்டி உள்ளார். அன்று காலை காலை 9:30 மணிக்கு, கவர்னர் ரவி உரை நிகழ்த்த உள்ளார். சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூடி, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்யும். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தால், விவாதம் செய்து நிறைவேற்ற, சட்டசபை தயாராக உள்ளது.கடந்த முறை, தன் உரையின் முதல் மற்றும் கடைசி பக்கத்தை கவர்னர் வாசித்தார். இந்த முறை முழு உரை வாசிப்பார் என நம்புகிறோம். கடந்த 2011 முதல் 2021 வரை, ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால கூட்டத்தொடர், இரண்டு நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் காரணமாக, கூட்டம் குறைவான நாட்கள் நடத்தப்பட்டன.வெள்ளம் போன்ற பாதிப்புகள் வரும்போது, அமைச்சர்கள் களத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால், சட்டசபை கூட்டத்தை அதிக நாட்கள் நடத்த இயலவில்லை. சூழலுக்கு தகுந்தபடி சட்டசபை கூட்டம் நடத்தப்படும். ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்த வேண்டும் என்பது எண்ணம்.மதுரை, டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேச, தேவையான நேரம் கொடுத்தோம். அரசு எதிர்க்கட்சியை மதிக்கிறது; பேச அனுமதி அளிக்கிறது. சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடு பார்ப்பதில்லை. சட்டசபையில், உரை நிகழ்த்த மட்டுமே கவர்னருக்கு அனுமதி உள்ளது; கருத்து கூற அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, 234 எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டுமே கருத்து கூற அனுமதி உண்டு. பார்லிமென்டில் அமைச்சரவை கூடி எழுதி கொடுக்கும் உரையை, ஜனாதிபதி முழுமையாக வாசிக்கிறார். அதன்படி சட்டசபையில், முதல்வர், அமைச்சரவை எழுதி கொடுக்கும் உரையை, கவர்னர் வாசிக்க வேண்டும். அதை வாசிக்கும் உரிமை மட்டும் அவருக்கு உண்டு; சொந்த கருத்தை கூற, அவருக்கு உரிமை இல்லை.சட்டசபைக்கு வரும் கவர்னருக்கு உரிய மரியாதை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

karthik
ஜன 06, 2025 10:45

இவனுங்க எல்லாம் சொந்த கருத்தை தமிழக மக்கள் மீது திணித்து கொண்டுதான் இருக்கானுங்க. தேசிய கீதம் பாடச்சொன்னது தனிப்பட்ட கருத்தா?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 21, 2024 13:48

சட்டசபையில் அதிகாரம் இல்லை நீங்கள் சொல்வது சரியென்று வைத்து கொண்டாலும் கவர்னர் சட்டசபைக்கு வெளியே தனது கருத்தை கூற அதிகாரம் உண்டு என்பது தெளிவாகிறது. பின் எதற்காக கவர்னர் கருத்து கூறினால் கவர்னர் கவர்னர் வேலையை மட்டும் செய்யனும்னு நீங்கள் உங்கள் அமைச்சர்கள் முதல்வர் மற்றும் திமுக தலை முதல் கால் வரை கவர்னரை திட்டுகிறீர்கள். எ


Anand
டிச 21, 2024 11:10

மொதல்லே உனக்கு அந்த அருகதை இருக்கா? நீ நேர்மையானவனா? நடுநிலையோடு செயல்படுபவனா? உன்னால் அந்த பதவிக்கே இழுக்கு.


Senthil
ஜன 06, 2025 10:59

அதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை. இங்கு வாழ்கிற 97.5% மக்களின் எண்ணங்களுக்கு, விருப்பத்துக்கு மாறாக வெறும் 2.5% மக்களின் பிரதிநிதியாக செயல்பட்டால் எப்படி அனுமதிக்க முடியும்? இங்கு கடைசி வரை கத்திக்கொண்டே இருந்துவிட்டு போக வேண்டியது தான், வேறு எதையும் செய்ய முடியாது.


Senthil
ஜன 06, 2025 11:01

என்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அன்றே அவருக்கு அந்த அருகதை வந்துவிட்டது. மக்களாட்சியில் அனைத்துமே மக்களின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டதுதான். தங்களின் சொந்தக் கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம், ஆனால் செயலுக்கு வராது. வரவே வரமுடியாது.


sankaranarayanan
டிச 21, 2024 10:09

ஆளுநர் ஒன்றும் கிளிப்பிள்ளை இல்லை அவருக்கும் நாட்டின் நடப்பு தெரியும் அவரை யாரும் நிர்பந்தித்து இதைத்தான் படிக்க வேண்டும் என்று கம்பெல் செய்ய முடியாது ஆளுநர் மாநிலத்தை ஆள்பவர் அவரிடம் எழுதி கொடுத்து வாசி என்பதெல்லாம் பழையகாலம் நடக்காதைதையம் செய்ய முடியாததையும் நடந்து விட்டதாக கற்பனையில் எழிகொடுத்து அடுக்குமொழிகளெல்லாம் எழுதி கொடுத்து அவரிடம் வாசி என்றால் அது செல்லாது


Senthil
ஜன 06, 2025 11:19

அவர் தன் சொந்த கருத்தை சபையில் சொல்ல முடியாது, மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே சபையில் கருத்து சொல்ல உரிமையுள்ளவர்கள். அரசு எழுதி கொடுப்பதைத்தான் இவர் படிக்க வேண்டும், இவர் படிக்கவில்லை என்றால் வேறு ஒருவர் படிக்கப் போகிறார். இவரால் எதையுமே செய்ய முடியாது. பேப்பர் வந்தால் கையெழுத்து போட்டுத்தான் ஆகனும், ஒரு முறை திருப்பி அனுப்பலாம், மறுமுறை கையெழுத்து போட்டே ஆகணும், ரப்பர் ஸ்டாம்புக்கு வேறு வழியில்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2024 07:36

சபாநாயகர் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாகச் செயல்படக்கூடாது ....


Senthil
ஜன 06, 2025 11:04

என்ன பன்றது, எல்லா ஆட்சியிலும் அப்படித்தானே நடக்கிறது, மத்திய அரசில் எவ்வளவு கேவலமாக நடக்கிறது என்பதையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். அதிகாரம் இருக்கும்போது இப்படித்தான். ஆனால் என்ன செய்வது தமிழ்நாட்டின் அதிகாரம் என்றுமே அதிமுக திமுகவிடம் மட்டும்தான், மற்றவர்கள் கூச்சல் மட்டுமே போடலாம்.


ramani
டிச 21, 2024 07:20

ஆளுநருக்கே அதிகாரம் இல்லையென்றால் உங்களுக்கு? ஆளுநர் தான் மாநில முதல் குடிமகன்.


Senthil
ஜன 06, 2025 11:07

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பது தெரியாதா? அது மத்திய அரசின் நியமனப் பதவி, அதனால் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதிக்கே இங்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியுமே


raja
டிச 21, 2024 06:12

போயான்னு சொண்ண தங்க கூந்தலுக்கு என்ன கதி ஆனது என்று இந்த வாத்துக்கு தெரியவில்லையா...


raja
டிச 21, 2024 06:08

கூமுட்டைகளுக்கு அவர் நினைத்தால் சபையை கூட்டவும் முடியும் களைக்கவும் முடியும் என்பது தெரிய வில்லை போலும்...


Senthil
ஜன 06, 2025 11:15

ஏன் நினைக்கட்டுமே, நினைத்து பார்க்கட்டுமே.


subramanian
டிச 21, 2024 05:49

கடமையை செய்பவனுக்கு மட்டும் தான் உரிமை உண்டு. டேய்...அப்பாவு நீ கடமையை செய்ய வில்லை அதனால் உனக்கு உரிமை இல்லை. இருநூறு ரூபாய் வழங்கப்படும்.


Senthil
ஜன 06, 2025 11:13

என்ன ஒரு நாகரீகம்? அவ்வளவு கோபம்? ஆனால் இந்த கோபம் தமிழ்நாட்டில் செல்லாக்காசு, காரணம் தமிழ்நாட்டின் 97.5% மக்களுக்கு எதிரான 2.5% ன் கோபம், அது என்ன செய்ய முடியும்?


நிக்கோல்தாம்சன்
டிச 21, 2024 05:45

அந்த ஜார்ஜு பொன்னையா போட்ட பிச்சை பத்தி வாசிக்க சொல்லலாமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை