உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் ஆர்வம் தேவை: மாணவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தல்

ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் ஆர்வம் தேவை: மாணவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தல்

வேலுார்: ''இந்தியாவின் வளர்ச்சிக்காக ஏ.ஐ., தொழில்நுட்பம், நானோ ரோபோடிக்ஸ் போன்றவற்றில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.வேலுார் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில், தென் மாநிலங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் இருநாள், மாநாடு நேற்று துவங்கியது. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த, 120 பல்கலை துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.அகில இந்திய பல்கலை சங்க தலைவர் விநய்குமார் பதக் தலைமை வகித்தார். செயலர் பங்கஜ் மிட்டல், வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டை துவக்கி வைத்து தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தும் முன், அவர்கள் நம் வாழ்க்கை முறை, கல்வி முறை ஆகியவற்றை நன்கு தெரிந்து கொண்டனர். ஹிந்து மதமும், கல்வி முறையும், பண்டைய காலத்தில் சுய சிந்தனை செயலாற்றலுடன் இருந்தது. நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள், அடிமை கல்வி முறையான மெக்காலே கல்வி முறையை திணித்தனர். அதைத்தான் நாம் இன்னும் பின்பற்றி வருகிறோம்.அவற்றை மாற்றவும், முன்னேற்றம் அடையவும், அந்த நோக்கத்தில் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது நல்லொழுக்கத்தையும், முன்னேற்றத்தையும் தரும்.கல்வி, பண்டைய காலத்தில் அரசர் ஆளுமையின் கீழ் இருந்தது. ஆனால் தலையீடு இருக்காது. அதுபோல தான், தற்போது மத்திய ஆளுமையின் கீழ் கல்வி உள்ளது. மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய அரசே கல்வியை வழி நடத்தும்.கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் மற்ற நாடுகளை காட்டிலும் நம் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. உலக நாடுகளுக்கு பல திட்டங்களையும், கண்டுபிடிப்புகளையும் வழங்குவதில் இந்தியா முதன்மை நாடாக உள்ளது.ஏ.ஐ., எனப்படும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட்ஸ், நானோ ரோபோடிக்ஸ் போன்றவற்றிலும் இந்தியாவின் வளர்ச்சிக்காக மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் சுதந்திரமாக செயல்படுகின்றன.இவ்வாறு கவர்னர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 11, 2025 10:09

துணை வேந்தர்கள் கான்பரன்ஸ் ஸில் மாணவர்கள் யாரும் பங்கேற்க இயலாது. அந்த கூட்டத்தில் இல்லாத மாணவர்களுக்கு அறிவுரையா? முதலில் ஜனகனமன பாடினாங்களா?? கவர்னருக்கு அதுதான் முக்கியம்.


Barakat Ali
ஜன 11, 2025 09:05

எங்களுக்கெல்லாம் அந்த தொழில்நுட்பத்தில் ஆர்வமில்லை .... ஜாஃபர் சாதிக் அண்ணன் உலகை மறக்க அறிமுகப்படுத்திய தொழில்நுட்பத்தில்தான் நாட்டம் .....


Kasimani Baskaran
ஜன 11, 2025 07:21

படிக்காத ராம்சாமிதான் தமிழகத்தின் மாடலுக்கு மூல ஆதாரம். அதை உடைக்க கவர்னர் நினைத்தார் என்றால் சேற்றை வாரி அடிக்க திராவிட கால் நக்கி பிழைக்கும் தந்திகள் தயங்கமாட்டார்கள்.


அப்பாவி
ஜன 11, 2025 06:49

ஏ.ஐ தொழில்நுட்பம் நானளே ஜண்டுபுடிச்டோம். இதுக்கான ஆதாரம் குப்தேஸ்வர சம்ஹிதையில் இருக்கு. அதை பிரிட்டிஷ்காரன் திருடி அமெரிக்காவுக்கு வித்துட்டான். அமெரிக்கா அதை சேட் ஜிபிடின்னு நமக்கே விக்கிறான். உலகத்தில் எவன் எதைக் கண்டுபிடிச்சாலும் அது நம்பளதுதான். மாணவர்கள் கலந்து கொள்ளாத துணைவேந்தர்கள் மாநாட்டில் ஜெவுனர் மாணவர்களுக்கு அறிவுரை.


Kasimani Baskaran
ஜன 11, 2025 14:07

வனவாசமும் அந்த மரணசாசனமும் படிங்க... எப்பவாவது திருந்த முடியுதான்னு பார்க்கலாம்.


சமீபத்திய செய்தி