உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முடிவடையும் கவர்னர் ரவியின் பதவிக்காலம்: நீட்டிக்க மத்திய அரசு திட்டம்?

முடிவடையும் கவர்னர் ரவியின் பதவிக்காலம்: நீட்டிக்க மத்திய அரசு திட்டம்?

சென்னை: தமிழக கவர்னர் ரவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய அரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆர்.என்.ரவி நாகாலாந்து கவர்னராக கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் மேகாலயா கவர்னர் பொறுப்பையும் (டிசம்பர் 18, 2019 முதல் ஜனவரி 26, 2020 வரை) சேர்த்து கவனித்து வந்தார். நாகாலாந்து கவர்னராக இருந்த ரவியை, தமிழக கவர்னராக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டார். 2021ம் ஆண்டு முதல் தமிழக கவர்னராக மாற்றப்பட்டு, தற்போது வரை நீடித்து வருகிறார்.கவர்னருக்கான பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆர்.என்.ரவி கவர்னராக 2019, ஆகஸ்டில் பொறுப்பேற்ற நிலையில், வரும் ஜூலை 31ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனால் தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால், கவர்னர் ரவியின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மத்திய அரசு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் டில்லி சென்ற ரவி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

GMM
ஜூலை 19, 2024 19:04

தற்போதைய கவர்னர் பதவி காலம் நீடிக்க வேண்டும். தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், காஸ்மீர் போன்ற மாநிலகளுக்கு நன்கு முடிவு எடுக்கும் கவர்னர் தேவை. இல்லவிட்டால் தீவிர வாதிகள் பிடியில் மாநிலம் சிக்கும். இங்குள்ள பொம்மை மந்திரிகள் சபை ஓட்டு பெற தவறான முறையில் செயல்பட்டு சிக்கி தவிக்கிறது.? வலுவான கவர்னர் தேவை.


Jysenn
ஜூலை 19, 2024 18:24

Some one like K K Shah is most welcome. What can a governor do if the central government is useless and spineless and cowardice in functioning?


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 19, 2024 17:32

ஆட்சிக்கலைப்புக்கு பரிந்துரைக்கக் கூடாது .....


venugopal s
ஜூலை 19, 2024 16:56

அவ்வப்போது அரசியல் காமெடி செய்து எங்களுக்கு உற்சாகமூட்டும் ரவி அவர்களே தமிழக ஆளுநராக தொடர வேண்டும்!


RAJ
ஜூலை 19, 2024 15:55

Subramaniyam swamy is perfect choice for tamilmadu


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 19, 2024 17:00

சுப்பிரமணியன் சுவாமி தமிழ் நாட்டை சேர்ந்தவர். ஒரு மாநிலத்தை சேர்ந்தவரை அதே மாநிலத்துக்கு கவர்னராக நியமிக்கமுடியாது.


Oviya Vijay
ஜூலை 19, 2024 15:38

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற உதவிய இந்த கவர்னரே 2026 வரையிலும் நமக்கு வேண்டும்...


Anbuselvan
ஜூலை 19, 2024 15:22

அரசியல் சாசனம் நன்கு அறிந்த மற்றும் கண்டிப்பானவரை கவர்னர் ஆக நியமித்தால் நன்றாக இருக்கும்


Lion Drsekar
ஜூலை 19, 2024 14:36

இங்கு பத்மா பட்டங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, கொடிமட்டுமே ஏற்றவேண்டும். ஆண்டுக்கு இரண்டு நாட்கள் கொடியேற்றிய பின்பு முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு தேநீர் விருந்து. ஆனால் இந்த ஆளுநர் வந்த பிறகு திரும்பும் இடமெல்லாம் எத்தினை பேச்சு, இவர் ஒரு மூத்த காவல் துறை அதிகாரி, இவர் வந்தவுடன் என்ன நடக்கப்போகிறது என்று பாருங்கள், எல்லோரும் சட்ட சிக்கல்களுக்கு ஆளாகி ..??? எத்தினை கதை வசனங்கள் எண்ணிலடங்காதது. அதே போன்று கையில் கட்டுக்காட்டாக, பேட்டி நிறைய புகார்கள் பட்டியல்கள், இரவு இரவாக திடீர் டில்லி பயணம். அதக்கிற்குள், அன்பு சகோதரர் டெல்லி திரு ராஜகோபால் ஐயா அவர்கள், இனி தமிழகமே நடுநடுங்ம், எல்லோரும் சிறை செல்வது உறுதி, எல்லா துறைகளும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு வருகிறது , அடுத்த மாதம் எல்லாமே கலகலைத்துப்போகும்..?? இந்த ஒரு ஆளுநரை வைத்துக்கொண்டு ஐந்து ஆண்டுகள் சீரியலை ஒட்டிய பெருமை எல்லோருக்கும் உண்டு . ஆனால் நடப்பதுதான் நடக்கிறது. நடக்கபோவதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. இனியாவது ஆளுநர் டெல்லி சென்றாலும், ஊட்டி என்றாலும் , அவரது வீட்டுக்குச் என்றாலும் எந்த ஒரு அபாயகரமான ஹாஹாஹா செய்திகளையும் சொல்லி ஆளுநர் பதவியை கேலிக்கூத்தாக்க வேண்டாம். அவர் பாவம் காவல்துறை பென்சன் மற்றும் ஆளுநர் பெங்ஷனைப் பெற்றுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் ராஜ வாழ்க்கை வாழட்டும். யாராவது ஒருவர் எனக்கு இரண்டு பென்சன் வேண்டாம், ஒரே ஒரு பெனிஷன் போதும் என்று சொன்னால் அவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும் வந்தே மாதரம்


umar ali
ஜூலை 19, 2024 14:26

ஆரிப் கான், கவர்னர் பதவிக்கு லாயக்கற்றவர்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 19, 2024 17:31

ஏன் ? காஃபிர்களைப்போல நடந்து கொள்வதாலா ??


Narayanan
ஜூலை 19, 2024 13:37

சுப்ரமணியம் ஸவாமியை கவர்னர் தமிழ்நாட்டின் ஆக்குங்கள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை