உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலையில் பாதுகாப்பு மேம்படுத்த கவர்னர் உத்தரவு!

அண்ணா பல்கலையில் பாதுகாப்பு மேம்படுத்த கவர்னர் உத்தரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, அண்ணா பல்கலையில் இன்று தமிழக கவர்னர் ரவி ஆய்வு மேற்கொண்டார். பல்கலை வளாகத்தில் பாதுகாப்பை மேம்படுத்தவும் உத்தரவிட்டார்.சென்னை அண்ணா பல்கலையில் கடந்த 23ம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இன்று நடந்த விசாரணையில், பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.இந்நிலையில், பல்கலை வேந்தரான கவர்னர் ரவி, இன்று அண்ணா பல்கலையில் ஆய்வு மேற்கொண்டார். பல்கலையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, கேட்டறிந்தார். சிசிடிவி கண்காணிப்பு, அனைத்து நுழைவாயில்களிலும் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கவர்னருடன் உயர்கல்வித்துறை செயலாளர் கோபால் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்தனர். பல்கலை வளாகத்தில் இருந்த மாணவர்கள் 10 பேரிடம் கவர்னர் நேரடியாக பேசி, அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.மாணவியர், பணிபுரியம் பெண்கள் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் விசாரித்த கவர்னர், எதிர்காலத்தில் எத்தகைய சர்ச்சையும் எழாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

C.SRIRAM
டிச 28, 2024 17:44

எல்ல நுழைவு வாயில்களிலும் போலீஸ் செக் போஸ்ட் போட்டு நுழைவு அனுமதி கண்டிப்பாக சோதனை செய்யப்படவேண்டும் . முன்னரே அனுமதியின்றி வெளியாட்கள் தங்கள் வாகனங்களை பல்கலை வளாகத்துக்குள் அனுமதியின்றி நிப்பாட்டி செல்வதால் மாணவர்களுக்கும் பல்கலை பேராசியர்களுக்கும் வாகனங்களை நிறுத்த முடியாமல் போவது பற்றி செய்திகள் வந்தது . அப்போது கூட உஷார் ஆகாத கையாலாகாத அரசு. பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர உள்ளெ செல்ல அனுமதி மறுக்கப்படவேண்டும் . ஆன்லைன் நுழைவு சீட்டு அனுமதி முறையை ஏற்படுத்தி தகுதி முறையில் மட்டுமே அனுமதி வழங்கப்படவேண்டும் .


C.SRIRAM
டிச 28, 2024 17:33

இதை கூட இன்னமும் தி. திராவிட அரசு செய்யவில்லை . கருத்து என்கிற பெயரில் உளறுவதற்கு முன்னர் யோசிப்பது நல்லது . மூளை கேட்ட முட்டு கொடுப்பாளர்


S. Venugopal
டிச 28, 2024 17:08

மாண்புமிகு ஆளுநர் அவர்களின் செயல் மாணவ மாணவியர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். நமது நாட்டில் உள்ள அணைத்து கல்லூரிகளும் சி ஐ எஸ் எப் / சி ஆர் பி எப் மூலம் பாதுகாத்தால் பல கோணங்களில் மாணவ மாணவியர்களுக்கம் ஆசிரியர்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.


Raj
டிச 28, 2024 16:49

இதற்கு முன்பு இந்த கவர்னர் எப்போது ஆய்வு மேற்க்கொண்டார். ஒரு சம்பவம் நடந்த பிறகு அதை ஆய்வு செய்வது என்பது சரியான நிர்வாக பொறுப்பில்லை. இது போல பொறுப்பற்ற நிர்வாகம் தேவையில்லை தமிழகத்திற்கு, மக்களாட்சி என்று கூறிவிட்டு, வாக்களித்த மக்கள் நடுத்தெருவில். கேவலமா இருக்கு.


Admission Incharge Sir
டிச 28, 2024 17:25

சரி கவர்னர் போகவில்லை. முதலமைச்சர் எத்தனை தடவை சென்று பாதுகாப்பை சோதனை செய்துள்ளார். யுனிவர்சிட்டிக்கு அர்த்தமாவது தெரியுமா?


அப்பாவி
டிச 28, 2024 15:34

கடைசி வரை சார் யாருன்னு தெரியாமலேயே ஆளாளுக்கு ஆய்வு செய்வாங்க. ஆடி காரும் காணாம போயிடும்.


C.SRIRAM
டிச 28, 2024 17:46

ஆய்வு செய்யாமல் எப்படி சார் யாரென்று தெரியும் . கருத்து கந்தல்


Constitutional Goons
டிச 28, 2024 15:15

அடுத்தவரகளை குறை கூறாமல், வேந்தர் என்ற முறையில் நிர்வாக சீர்கேடுகளை உடனடியாக கலையவேண்டும்


பல்லவி
டிச 28, 2024 14:57

ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதற்கு விருதுநகர் பேராசிரியை உதாரணங்கள் உண்டு ஆனால் இந்த ஆளுநர் அய்யாவுக்கு அதெல்லாம் தெரிவிக்கவும்


veera
டிச 28, 2024 16:58

நீ என்ன பெண்ணா இல்லை பெண் பெயரில் ஒரு ஈன பிறவியா


INDIAN
டிச 28, 2024 13:20

இங்கே எனது கருத்துக்கு தகுந்த விளக்கம் அளிக்க இயலாதவர்கள் பல்வேறாக என்னை விமர்சித்து கொண்டிருக்கிறார்கள், அவர்களை பார்த்து பரிதாபப்படுகிறேன் , இப்படி ஆட்சியாளர்களுக்கு ஒரு அவப்பெயர் வந்திருக்கும் போது கூட அதை முறையாக விமர்சிக்கவும் , விமர்சிப்பவர்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து கூறமுடியாமலும் ஆனா நிலையில் உள்ள கட்சிகலில் சேர்ந்திருப்பதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இயலாமைக்கு பரிதாபப்படுகிறேன் , இங்கே பலரும் என்னை விமர்சித்திருக்கிறார்கள் , எனது கருத்தை அவர்களால் விமர்சிக்க இயலவில்லை . அதுவே என் கருத்தின் உண்மையை உலகுக்கு சொல்லிவிட்டதற்கு அடையாளம்


ஆரூர் ரங்
டிச 28, 2024 14:35

பொள்ளாச்சி வழக்கில் மூன்றாண்டுகளாக ஆட்சி செய்யும் ஸ்டாலின் அரசால் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஒருவர் மீதும் முழுமையான இறுதி வாதங்கள் நடைபெறவில்லை .அதாவது மொத்த வழக்குமே நம்ப முடியாத ஜோடிக்கப்பட்ட ஒன்று போல தோற்றமளிக்கிறது. ஆக திராவிட பங்காளிகளுக்குள்ளே ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. மற்றபடி நிர்மலா தேவி மேட்டர் வழக்கில் கவர்னர் சிறிதும் சம்பந்தப்படவில்லை என்று அப்படியெல்லாம் எழுதிய பத்திரிக்கையாளர் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டார். நீங்கள் வணங்கும் அரபி கடவுள் மேல் ஆணையாக வக்கிர மனதுடன் கருத்துப் பதிய வேண்டாம்.


T.sthivinayagam
டிச 28, 2024 12:56

வேந்தர்களாக அந்த அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களே இருக்க வேண்டும்


veera
டிச 28, 2024 17:00

அதைவிட முக்கியம் அவர்களுக்கு மூளை இருக்கவேண்டும் கொத்தடிமை


சம்பா
டிச 28, 2024 12:53

ஆய்வு எதுக்கு ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை