உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்

கவர்னர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, கவர்னர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராஜ் பவனில் தேநீர் விருந்துக்கு கவர்னர் ரவி ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த விருந்தை புறக்கணிப்பார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.அழகப்பா, திருவள்ளுவர் பல்கலை பட்டமளிப்பு விழாக்களில் தான் பங்கேற்கபோவதில்லை என்றும் உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை