மேலும் செய்திகள்
சாட்டிலைட் போனுடன் வந்த மாணவரின் பயணம் ரத்து
01-Aug-2025
சென்னை:விமான பாதுகாப்பு விதிகளை மீறி, ஜி.பி.எஸ்., கருவி எடுத்துச் செல்ல முயன்ற பயணியால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து சேலம் செல்லும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று மாலை புறப்பட தயாரானது. பய ணியரிடம் வழக்கமான சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சேலத்தைச் சேர்ந்த சுரேஷ், 35, என்ற பயணியின் உடைமைகளை பரிசோதித்தபோது, அவர் பையில், ஆராய்ச்சிக்கு பயன்படுத்தக்கூடிய ஜி.பி.எஸ்., கருவி இருப்பதை அதி காரிகள் கண்டறிந்தனர். தொடர்ந்து, சுரேஷின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற் கொண்டனர். சேலத்தில், கனிம சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வருவதும், பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழத்தில் கனிமம் உள்ளது என்பதை கண்டறிய, அவர் இந்த கருவியை வாங்கி இருப்பதும் தெரியவந்தது. விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, விமானத்தில் ஜி.பி.எஸ்., போன்ற கருவிகளை எடுத்து செல்லக் கூடாது. எனவே, சுரேஷ் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிகாரிகள், அந்த கருவியை பறிமுதல் செய்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
01-Aug-2025