உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக கிராம சபையில் தீர்மானம்

ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக கிராம சபையில் தீர்மானம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15ம் தேதி, கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராமங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளாக திகழ வேண்டும் என்பது காந்தியின் கனவு. அதை நனவாக்குவதற்கான ஆயுதம், கிராம சபை கூட்டங்கள். கடந்தாண்டு ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டங்களில், என் வேண்டுகோளை ஏற்று, முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுபோல், வரும் 15ல் நடக்கவுள்ள கிராம சபை கூட்டங்களில், 'தமிழகத்தில் சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்பவும், சமூக ரீதியாக பின்தங்கிய நிலையின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்க, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்ற தீர்மானத்தை, பா.ம.க.,வினரும், பொதுமக்களும் நிறைவேற்ற வேண்டும். அன்புமணி, தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி