வாழ்த்து உண்டா?
விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறுவதில்லை. 'ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும்' என, முதல்வரை, ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதை, தமிழக பா.ஜ., குற்றச்சாட்டாக சொல்லி வருகிறது. தற்போது, தீபாவளி பண்டிகையை ஒட்டி, பொங்கல் பரிசு அறிவிக்கப்படும்போது, அதில் தீபாவளி வாழ்த்தும் இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.