உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 மாதங்களில் ஜி.எஸ்.டி., வருவாய் குறைவு

5 மாதங்களில் ஜி.எஸ்.டி., வருவாய் குறைவு

சென்னை: நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், தமிழக அரசின் ஜி.எஸ்.டி., வருவாய் 2.87 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாநில பட்ஜெட் தொடர்பாக, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கை: நடப்பு, 2025 - 26ம் நிதியாண்டில் ஆகஸ்ட் வரையிலான முதல் ஐந்து மாதங்களில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 74,943 கோடி ரூபாய். இது, நிதியாண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீட்டில், 33.93 சதவீதம். இதை முந்தைய நிதியாண்டில் பெறப்பட்ட வருவாயுடன் ஒப்பிடும் போது, கணிக்கப்பட்ட வளர்ச்சியான, 22.57 சதவீதத்திற்கு மாறாக, 3.94 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடும் போது, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், ஜி.எஸ்.டி., வருவாய், 2.87 சதவீதம் குறைந்துள்ளது. இதுவே ஒட்டு மொத்த, மாநில வரி வருவாயில் காணப்படும், குறைவான வளர்ச்சி விகிதத்திற்கு முக்கிய காரணம். இது மட்டுமல்லாமல், ஜி.எஸ்.டி., கீழ், முந்தைய ஆண்டில் அதிகப்படியாக, மாநில அரசிற்கு விடுவிக்கப்பட்ட 1,709 கோடி ரூபாயை, எதிர்பாராத வகையில், மாநில அரசின் கணக்கில் இருந்து, மத்திய அரசு பிடித்தம் செய்துள்ளது. உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகளில் நிலவும் மந்த நிலையால், பொருளாதார வளர்ச்சி பொதுவாக குறைந்துள்ளது. மாநில சொந்த வரி வருவாயில் காணப்படும் குறைவான வளர்ச்சிக்கு, இதுவும் காரணமாக அமைந்துள்ளது. மாநில அரசுக்கு ஏற்பட வாய்ப்புள்ள இழப்பை ஈடு செய்வதை கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி., வரி குறைப்பால், மாநில வரி வருவாய் வரவுகள் மேலும் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை