உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி: ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி: ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பை தொடர்ந்து ஆவின் பால் பொருட்களின் விலைகளை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.மத்திய அரசு செய்துள்ள ஜிஎஸ்டி வரிக்குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. அதன்படி பல்வேறு நிறுவனங்களும் தங்கள் உற்பத்தி பொருட்களின் விலையை குறைத்துள்ளன.தமிழகத்தில் பால், பால் பொருட்களை விற்பனை செய்யும் ஆவின் நிறுவனமும், விலையை குறைத்துள்ளது. ஆனால், அதன் எம்.ஆர்.பி., விலையை குறைக்காமல் வரியை மட்டும் குறைத்துள்ளது. இது, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி, 'ஆவின் விலைக்குறைப்பு என்ற பெயரில் நாடகம் நடத்துவதாக' குற்றம் சாட்டியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=necltpf7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்காத வகையில் செயல்படுவதாக, நெட்டிசன்கள் ஆவின் மீது இணையத்தில் சரமாரியாக புகார் எழுப்பி வருகின்றனர். ஆவின் விலைக்குறைப்பு விபரம் பின்வருமாறு:* 1 லிட்டர் நெய் ரூ.690ல் இருந்து ரூ.650ஆக குறைக்கப்பட்டு உள்ளது.* 50 மி.லி.நெய் ரூ.48 இருந்தது, இனி ரூ.45க்கு விற்பனை செய்யப்படும். 5 லிட்டர் நெய் ரூ.3600 இருந்தது, இனி ரூ.3,250க்கு விற்பனை செய்யப்படும். 15 கிலோ நெய் ரூ.11,880 இருந்தது, இனி ரூ.10,725 க்கு விற்பனை செய்யப்படும்.* ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பனீர் ரூ.110க்கும், ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட 500 கிராம் பனீர் ரூ.275க்கும் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆவின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா அளவில் கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களை காட்டிலும் ஆவின் நிறுவனம் பொது மக்கள் நலன் கருதி மிகவும் குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் உப பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஆவின் விற்பனை மூலம் வரும் வருவாய் 90 சதவீதத்துக்கு மேல் பால் உற்பத்தியாளர்களுக்கே வழங்கப்படுகிறது. அவ்வபோது , சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு இதர கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் போல் பால் மற்றும் பால் பொருட்களின் விலையை மாற்றி அமைக்காமல் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் நலன் சார்ந்து பால் உப பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பால் மற்றும் பால் உபபொருட்களை விற்பனை செய்வதாலும் மற்றும் பால் தரத்துக்கு ஏற்ப பால் கொள்முதல் செய்வதாலும் ஆவின் நிறுவனம் நிதி சுமையை கவனத்தில் கொண்டு சந்தையில் குறைவான விலையில் தரத்துடன் அனைத்து பால் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Bhaskar Srinivasan
செப் 22, 2025 21:32

பாலுக்கு GST முன்பும் கிடையாது இப்போதும் கிடையாது. தயிருக்கு 12% இருந்து 5% குறைக்க படவேண்டும். ஆவின் நிறுவனம் வாய் திறக்கவில்லை. அதாவது 35 ரூபாய் 1/2 லிட்டர் தயிர் 33 32.8 ரூபாயாக வேண்டும்.


V GOPALAN
செப் 22, 2025 21:12

அமுல் வாங்குவோம்


sankaranarayanan
செப் 22, 2025 18:36

மக்கள் பருந்தும் ஆவின் பால் விலை குறையவில்லையே


Columbus
செப் 22, 2025 16:17

Only those products where GST was reduced will be available at reduced prices. Products which had no GST, will have same price as before.


Palanisamy Sekar
செப் 22, 2025 15:13

ஆகமொத்தம் இந்த முறை திமுகவுக்கு இறுதியாக பாலை ஊற்றி காரியத்தை கனகச்சிதமாக முடித்துவிடுவாங்க போல.


SUBBU,MADURAI
செப் 22, 2025 21:17

Excellent comment SUPERB


duruvasar
செப் 22, 2025 14:40

எதோ கடனுக்கு செய்தி வெளியிட்டது மாதிரி இருக்கிறது. பாலுக்கும் தயிருக்கும் வெண்ணைக்கும் விலை குறைப்பு கிடையாதா. அவர்களே கொடுக்காவிட்டாலும் வாசகர்கள் நலனுக்காக ஒரு பொறுப்புள்ள செய்தித்தாள் விவரத்தை கேட்டு பிரசுரிக்கமாடீர்களா ? போஸ்ட் ஆபீஸ் வேலையை செய்ய போஸ்டல் துறை இருக்கிறது.


Bala Krishnan
செப் 22, 2025 16:24

சரியாக கேட்டீங்க.


angbu ganesh
செப் 22, 2025 14:19

எல்லாம் சரி கடைல koraipangala


உண்மை கசக்கும்
செப் 22, 2025 14:14

இது திராவிட மாடலின் பிச்சை


A.Gomathinayagam
செப் 22, 2025 14:11

பால் பொருட்களில் சாமானியனுக்கு எழுபது ரூபாய் கிடைக்கிறது இரு ,நான்கு சக்கரங்கள் ,டிராக்டர் ,பிரிட்ஜ் ,வாஷிங் மிசின் போன்ற விலை உயர்ந்த பொருட்களை முதல் முறை வாங்கு பவர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது அவர்களுக்கே பயன். .தவிர என்பது கோடி ரேஷன் பொருட்கள் வாங்கும் சாமானியனுக்கு பெரிதாக கையில் பணம் கிடைக்காது


duruvasar
செப் 22, 2025 15:57

₹1000 கொடுத்து சினிமா டிக்கட் வாங்கி படம் பாக்கறவங்க சொன்னா உண்மையாகத்தான் இருக்கும்


சமீபத்திய செய்தி