உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபைக்குள் குட்கா: முதல்வர் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் விளக்கம் அளிக்க உத்தரவு

சட்டசபைக்குள் குட்கா: முதல்வர் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் விளக்கம் அளிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை தனி நீதிபதி ரத்து செய்தார். அந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட 17 தி.மு.க.., எம்.எல்.ஏ.,க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.அதிமுக ஆட்சியில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்தது தொடர்பாக, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நோட்டீசை உயர்நீதிமன்றம் இரு முறை ரத்து செய்தது. இதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஜூலை 29ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்றைய தினத்திற்கு( ஜூலை 31) தீர்ப்பு வழங்குவதாக கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.அதன்படி, நீதிபதிகள் இன்று, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், உரிமை மீறல் நோட்டீசுக்கு முதல்வர் உள்ளிட்ட 17 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Godyes
ஜூலை 31, 2024 18:56

சில அரசியல் வாதிங்க வெறும் வாய மெல்லுவானுக.அவர்களை குஷிபடுத்துவது குட்கா


Sridhar
ஜூலை 31, 2024 14:35

இதுக்கும் சேர்ந்து பெருமைப்படுவானுங்களே?


கூமூட்டை
ஜூலை 31, 2024 12:16

இது தான் திராவிட முன்னேற்றக் கழகம் மாடல்


Godyes
ஜூலை 31, 2024 11:55

பேசாமல் இருக்கும் போது வாய் அசை போட வேண்டாமா.அதுக்கு தான் குட்கா.


Venkatasubramanian krishnamurthy
ஜூலை 31, 2024 11:55

எந்த சபாநாயகரிடம்? திமுக உறுப்பினரான அப்பாவு என்கிறவரிடமா? நல்லா சொல்றீங்க தீர்ப்புகளை மாண்புமிகு கனங்களே?


N.Purushothaman
ஜூலை 31, 2024 11:53

துண்டுசீட்டுன்னு சொல்லி அவரு பாக்கெட்டுல யாரோ வச்சிட்டாங்க .....விளக்கம் எப்படி ?ஓக்கேவா ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை