உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறை தண்டனையை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு

சிறை தண்டனையை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு

சென்னை:சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், எச்.ராஜா மேல்முறையீடு செய்துள்ளார்.தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரலில், சமூக வலைதளத்தில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி எதிராக கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன், 'திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல, இங்கும் நாளை ஈ.வெ.ரா., சிலையை அகற்றுவோம்' என்றும், மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். இவ்விரு கருத்துகள் தொடர்பாக, தி.மு.க., மற்றும் த.பெ.க., சார்பில், ஈரோட்டில் புகார்கள் அளிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்குகளை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.இந்த இரண்டு வழக்குகளில், எச்.ராஜாவுக்கு, தனித்தனியாக ஆறு மாதம் சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து, டிச., 2ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, எச்.ராஜா தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ஐந்து மாதங்களுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாமதத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மூன்றாம் நபர் அளித்த புகாரின்படி பதிவான வழக்கில், நேரடி சாட்சியங்கள், ஆதாரங்கள் இல்லாத நிலையில், விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது சட்ட விரோதம். எனவே, சிறப்பு நீதிமன்றம் எனக்கு எதிராக வெளியிட்ட தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். மேல்முறையீட்டு வழக்கில் முடிவு காணும் வரை, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை