உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்திவைப்பு

எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்திவைப்பு

சென்னை: இரண்டு அவதூறு வழக்குகளில், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்குகளில் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கும்விதமாக ஓராண்டுக்கு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.பா.ஜ., தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈ.வெ.ரா சிலையை உடைப்பேன் என்று 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவு செய்தது தொடர்பாகவும், தி.மு.க. எம்.பி கனிமொழிக்கு எதிராக கருத்து கூறியதாகவும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் தி.மு.க., காங்கிரஸ் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகாரில் ஈரோடு நகர் போலீஸ் ஸ்டேஷன், கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரில் ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f8s4a0o8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையையும் முடிக்க சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன் நடைபெற்றது. ஈவெரா சிலை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை எனவும், எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் எச். ராஜா வாதிட்டார்.

தீர்ப்பு

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு இந்த இரண்டு வழக்குகளிலும் நீதிபதி ஜெயவேல் இன்று (டிச.,2) தீர்ப்பு வழங்கினார். அதில், 'எச்.ராஜா மீதான புகார் போலீஸ் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இரு பதிவுகளும் எச்.ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது என்று குறிப்பிடப்பட்டது. எனவே எச். ராஜா இரண்டு வழக்கிலும் குற்றவாளி என கருதப்படுகிறார்,' என்று தீர்ப்பு அளித்துள்ளார்.மேலும், எச்.ராஜாவுக்கு, இரண்டு வழக்கிலும் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனையும், இரு வழக்கிலும் சேர்த்து ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தண்டனை நிறுத்திவைப்பு

இந்த நிலையில், எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்குகளில் மேல்முறையீடு செய்ய எச்.ராஜாவுக்கு ஓராண்டு அவகாசம் வழங்குவதற்காக தண்டனை நிறுத்திவைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சண்டை தொடரும்

நீதிமன்றத்தில் ஆஜரான பின்பு எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தீர்ப்பை எதிர்த்து 31ம் தேதிக்குள் மேல்முறையீடு செய்வேன். இது அரசியல் ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கை. என்னுடைய சண்டை எப்பவும் தொடரும். இந்த மனநிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. 60 ஆண்டுகளாக ஒரு சித்தாந்தத்திற்காக போராடி வருகிறேன். அந்த போராட்டத்திற்கு இடையே எந்த பிரச்னை வந்தாலும் எதிர்கொள்வேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 89 )

1968shylaja kumari
டிச 09, 2024 09:32

பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு, மேல்முறையீடு செய்ய ஓராண்டுக்கு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி உதிரவிட்டுளார் இதுபோல வசதி எல்லா சாமானிய குற்றவாளிக்கும் கிடைக்குமா?


Sathyan
டிச 06, 2024 04:48

உதயநிதியின் இறுதி நாட்கள் மிகவும் மோசமானதாக இருக்கும்.


Srinivasan Krishnamoorthi
டிச 06, 2024 17:24

அட போங்கப்பா


Dominic
டிச 03, 2024 11:43

இவருக்கு ஒரு கேபினட் அந்தஸ்தில் ஒரு யூனியன் மந்திரி பதவி கொடுக்கவும் . இவரது அலப்பறை மீடியா விடம் குறையும்.


நிக்கோல்தாம்சன்
டிச 03, 2024 04:48

ஒரு கல்சிலையை உடைப்பேன் என்று கூறியதற்க்கே இப்படி என்றால் மதநிந்தனை செய்து மதக்கலவரம் ஏற்படுத்த நினைத்த துணைக்கு இன்னமும் தண்டனை ?


ஆரூர் ரங்
டிச 02, 2024 23:01

சிதம்பரம் நடராஜர் கோயிலையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கி வைத்துப் பிளப்பது எந்நாளோ என்றெல்லாம் திராவிட ஆட்கள் பேசிய போதே கோர்ட் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போ ராஜா இப்படிப் பேச வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. பிராமணர்களை இன அழிப்பு செய்ய வேண்டும் எனப் பேசிய பெரியாருக்கு சிலை வைப்பதும் அதை கோர்ட் விட்டு வைத்திருப்பதும் நாட்டுக்குக் கேடு.


skv srinivasankrishnaveni
டிச 09, 2024 08:44

அதெல்லாம் திக திமுக சொல்லலாம் அதான் அவாளுக்கு வேதவாக்கு அதற்குப் பரிகாரம்தான் துர்காம்மா கோயில் கோயிலாக போயி கும்பிடுறாங்களே சாமி அம்மா பராசக்தி இந்த கச்சிக்காரனுக பேசியதெல்லாம் மன்னிச்சுட்டு காப்பாய்நீயே enru


தமிழன்
டிச 02, 2024 21:15

உடைப்பேன் என்றதற்கே ஆறு மாதம் என்றால்.. ஒழிப்பேன் என்று சொன்னவருக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை வரும் என நினைக்கிறீர்கள்


தமிழன்
டிச 02, 2024 21:13

இதுக்கே ஆறு மாதம் என்றால்.. ஸாநாதனத்தை ஒழிப்பேன் என்று சொன்னவருக்கு எந்தனை ஆண்டுகள் சிறை தண்டனை வருமோ என்று நினைக்கும் போது தான்.. யார் அடுத்த முதல்வர் என்ற எண்ணம் வருகிறது.


Barakat Ali
டிச 02, 2024 20:24

குடும்பக்கட்சியின் ஊழல் அமைச்சர்களையும் அதே சட்டம் இதே போல் பாதுகாக்கிறது ..... ஆகவே எல்லோரும் போயி புள்ளை குட்டிங்களைப் படிக்க வையுங்க .....


Barakat Ali
டிச 02, 2024 20:10

ராஜா தரப்பின் வாதங்களில் ஒன்று ......ஈவெரா சிலை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை ...... ஆவேசமா கெளம்பி அசிங்கப்பட்டு நிக்கிறது என்பது இதுதான் ......


Matt P
டிச 02, 2024 18:34

ஈ வே ரா சிலையை உடைப்பேன் என்று சொன்னதற்கு தண்டனையா? தவறு என்று முடிவெடுத்தாலும் மன்னிப்பு கேட்க சொல்லலாமே.


சாண்டில்யன்
டிச 03, 2024 14:33

இன்னொரு வழக்குக்கு என்ன செய்யலாம்? அது இல்லேஜிட்டிமேட் வழக்குன்னு தள்ளுபடி செய்திருக்க வேண்டுமா வாய்க்கு அந்தத்தாய் பேசி விட்டு கோர்ட்டில் மன்னிப்பு கேட்பதே இவருக்கு வாடிக்கை என்று நீதி மன்றத்துக்கு தெரியுமே நல்ல வேளை அப்போதே இவருக்கு அரசு வாழ்நாள் பென்க்ஷன் வழங்க வேண்டுமென்று கேட்கவில்லை


Matt P
டிச 03, 2024 16:36

அவர் கனிமொழி கருத்துக்கு எதிர் கருத்தாய் என்ன சொன்னார் என்று தெளிவாய் தெரியவில்லை. அதிகமாக ஏதாவது சொல்லியிருந்தால் வாய் கொழுப்பு தான்.


Sathyan
டிச 06, 2024 08:23

சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறிய உதயநிதியின் இறுதி நாட்கள் மிகவும் மோசமானதாக இருக்கும். இது அவனுடைய வம்சத்தையும் தாக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை