உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர்கள் தொழில்முனைவோராக வளர ஊக்குவிக்க வேண்டும் பிராமணர் சங்க வர்த்தக மன்ற துவக்க விழாவில் எச்.ராஜா பேச்சு

மாணவர்கள் தொழில்முனைவோராக வளர ஊக்குவிக்க வேண்டும் பிராமணர் சங்க வர்த்தக மன்ற துவக்க விழாவில் எச்.ராஜா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:“மாணவர்களின் கல்வி காலக்கட்டங்களிலே தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்பது விதைக்கப்பட வேண்டும்,” உலக பிராமணர் சங்கத்தின் வர்த்தக மன்ற துவக்க விழாவில் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேசினார்.உலக பிராமணர்கள் நல சங்கத்தின் பிராமணருக்கான எட்டாம் ஆண்டு வர்த்தக மாநாடு, சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஜெ.டி., மஹாலில் நேற்று நடந்தது. விழாவில், சுந்தரம் பைனான்ஸ் அதிகாரி சுதர்ஷன் பேசியதாவது:ஒரு சமுதாயம் தன்னை சரிசெய்து கொள்ள, ஐந்து விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். தன்னை மேம்படுத்துவது; தன் குடும்பத்தை மேம்படுத்துவது; தன்னை சார்ந்த சமுதாயத்தை மேம்படுத்துவது; அந்த சமுதாயத்தால் தேசத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்துவது; அடுத்த தலைமுறைக்கு இதைக் கொண்டு செல்வது.இவற்றுக்கு ஒரு செயல் திட்டம் அவசியம். நாம் செய்யும் அனைத்து செயல்களிலும், குடும்பத்தின் ஈடுபாடு அவசியம். நம் நாட்டில் சிறந்த தொழில்களை நடத்துபவர்களின் பிள்ளைகள் படித்து, வெளிநாடுகளில் வேலைக்கு செல்வதால், அந்த பெற்றோரின் தொழில் முடங்கிப்போகிறது. அவ்வாறு முடக்கமின்றி தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.நாம் பிறந்த கிராமம், நம் குலதெய்தவம், நம் ஊர் என்ற உணர்வு எப்போதும் வேண்டும். பிறந்த தலத்திற்கு முடிந்த சேவைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து, வர்த்தகத்தில் சிறந்த சேவையாற்றிய எட்டு பேர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.நேற்று மாலை, உலக பிராமணர் நல சங்கத்தின், 'வர்த்தக மன்றம்' துவங்கப்பட்டது. அதற்கான, 'லோகோ' வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் லிமிடெட் நிறுவன தலைமை மேலாண் இயக்குநர் முரளி மலையப்பன் பேசுகையில், “லோகோ சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் வர்த்தம் செய்தால் நியாயம், ஒழுங்கு, நேர்மை இருக்கும். அது அடுத்த, 30 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்,” என்றார்.எம்.எம்., போர்ஜிங் நிறுவன தலைமை மேலாண் இயக்குநர் வித்யாசங்கர் பேசுகையில், “காயத்ரி மந்திரத்தை விட சிறந்த ஒரு மந்திரம் எதுவும் இல்லை. மூன்று வேளை சந்தியா வந்தனத்துடன், காயத்ரி மந்திரம் அவசியம் சொல்வது நல்ல சிந்தனைகள், புத்துணர்ச்சியை உருவாக்கும். நம்மையும், நம் குடும்பத்தையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்கும்,” என்றார்.விழாவில் மணலி பெட்ரோகெமிக்கல் மேலாண் இயக்குநர் சந்திரசேகர், இலங்கை, கேபிடல் மகாராஜா குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.இதையடுத்து, சாய் சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர் பஞ்சாபகேசன், மங்கள் தீப் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஸ்ரீமுகா நிறுவன மேலாண் இயக்குநர் ஹரிஹரன் ராமமூர்த்தி ஆகியோரை, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கவுரவித்தார்.பின், அவர் பேசுகையில், “ஜாதி வெறி இருப்பது தவறு. ஆனால், ஜாதி உணர்வு இருக்க வேண்டிய ஒன்று. கலாசாரம், பண்பாடு, தொண்டு ஆகியவை கொண்டு செல்ல வர்த்தகம் மிக அவசியம். கல்லுாரி மாணவர்களுக்கு நாம் உந்து சக்தியாக விளங்க வேண்டும்,” என்றார்.விழாவில், சங்கத்தின் தலைவர் சிவநாராயணன், துணை தலைவர் சிவகுமார், பொதுச்செயலர் சுந்தரம் சேஷாத்திரி, பொருளாளர் ஹரிபாஸ்கர், ஒருங்கிணைப்பு செயலர் விஜயகுமார், உறுப்பினர் நமஸ்தே கிருஷ்ணன், சிட்டி யூனியன் வங்கி வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Thravisham
செப் 07, 2025 14:54

மேற்கத்திய நாடுக்ளில் குறிப்பாக ஜெர்மனியில் பல்கலையில் பட்டம் பெற்று வரும் பல மாணவ மாணவிகள் ஓர் நிறுவனத்தை துவக்கி முதலாளிகளாக மாறுகிறார்கள். ஆனால் நம் மாணவ மாணவிகள் பல்கலையில் பட்டம் பெற்றதும் வேலை தேடுகிறார்கள். இதுதான் நம் பல்கலைகளின் லட்சணம்


Kasimani Baskaran
செப் 07, 2025 14:47

திராவிட ஸ்டயிலில் சொன்னால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதா. ரொம்பவே ஓவர். தகுதிக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்.


Rathna
செப் 07, 2025 13:21

1. ஒற்றுமையாக இருங்கள். உள் வேறுபாடுகளை மறந்து ஐயர், ஐயங்கார், மத்துவ, கன்னட, ஆந்திர, மராத்தி மட்டும் மற்ற சைவ உணவு உண்ணும் ப்ராஹ்மணர்களை திருமணம் செய்து கொள்ளுங்க. வடமாள் ப்ரஹசரணம், அஷ்ட சகஸ்ரம் போன்ற வேறுபாடுகளை புறம் தள்ளுங்கள். இது உங்கள் மக்கள் தொகையை அதிகரிக்க செய்யும். சந்ததி வளர உதவும். சமூதாய கட்டமைப்பை கொண்டு செல்ல உதவும். 2 சமூக ஒற்றுமை மிக முக்கியம். அது உங்களின் குரலில் அரசியலில் கொண்டு செல்லும். உங்கள் சாதியில் உள்ள புல்லுருவிகளை புறம் தள்ளுங்கள். ஒவ்வரு ஊரிலும் உங்கள் சாதி அமைப்பை உண்டாக்குங்கள். அது சட்ட விரோத செயல்களில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும். 3. ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். கோவில் பூசாரிகள், வேத விற்பன்னர்கள், வேத பாடசாலைகளுக்கு உதவுங்கள். உங்கள் குடும்பம் என்பதை மீறி ஒவ்வரு வசதி உள்ள குடும்பமும் ஒரு தொகையை, மிக வறுமையில் உள்ள கோவில்களுக்கு - ஒரு வேளை விளக்கு ஏற்ற - உதவ முயற்சி செய்யுங்கள். படிக்கும் வசதி இல்லாத கோவில் குருக்கள் குழந்தைகள், வேதம் சொல்லுவோர், மிக சின்ன வேலையில் இருப்போர் ஆகியவர்களுக்கு படிப்பிற்கு, திருமணத்திற்கு ஓரளவாவது உதவுங்கள். 4 தீபாவளி, பொங்கல், வருட பிறப்பு போன்றவற்றிற்கு உங்களுக்கு வாங்கும் உடைகளுடன், ஒரு வேஷ்டி, புடவை வாங்கி ஏழைகளுக்கு கொடுக்க முடியுமா என்று யோசியுங்கள். 5 கோ சாலைகளுக்கு உதவுங்கள். அது ஒரு சின்ன தொகையாக கூட இருக்கலாம். 6. திருமணத்தில் பெண்கள் படித்து விட்டோம் என்பதால் அதிக டிமாண்ட் மற்றும் கெடுபிடி செய்து, திருமணத்தை தள்ளி போடாதீர்கள். பெண்கள் குடும்பமும் இதில் கவனமாக இருக்கவும். திருமணத்தை தள்ளி போடுவது குழந்தை பிறப்பதையும், திருமண வாழ்வையும் பாதிக்கும். 7. உங்கள் பெற்றோர்களுக்கு செய்யும் வருட திதியை செய்யாமல் இருக்காதீர்கள். அதனால் குடும்ப பாதிப்பு ஏற்படும். திதி செய்ய வரும் ப்ராஹ்மணர்களுக்கு ஒரு நூறு ரூபாய் அதிகம் கொடுக்க முடியுமா என்று பாருங்கள். அது அவர்கள் குடும்பம் வாழ வழி வகுக்கும். 8. கோவில் உண்டியலில் போட்டு, திருடன் திருடுவதை ஊக்குவிக்காமல், கோவில் பூசாரிகள் தட்டில் ஒரு சிறு தொகையை கண்டிப்பாக போடுங்கள். கோவில் ஓதுவார், நாயனம் வாசிப்போர், கோவிலை சுத்தப்படுத்துவோர்களுக்கு ஒரு 10-20 ரூபாய் கண்டிப்பாக வழங்கலாம். 9 உங்கள் வீடு பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பு சொல்லி வளருங்கள். உங்கள் சமூதாய கட்டமைப்பை உடைக்க, ஒரு கூட்டம் அலைகிறது. இது லவ் ஜிகாத் அல்லது மாற்று மத இடையூறாக இருக்கலாம். அது உங்கள் குடும்ப பெண்களின் வாழ்க்கையை மற்றும் உங்கள் வாழ்க்கையை சீர்குலைக்கும். பெண் குழந்தைகளை சுதந்திரமாக வளர்த்தோம் என்று சொல்லி தவறான இடத்தில மாட்டி கொண்டு கோர்ட் கேஸில் அலைவதை முதலிலேயே கிள்ளி எறியுங்கள். 10 இந்த சமுதாயம் இந்த நாட்டிற்காக எவ்வளோவோ செய்து உள்ளது - மொழிக்கு, இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு. அதன் மீது, உங்கள் சமூகத்தின் மீது பெருமை கொள்ளுங்கள். உங்கள் சமூகம் மட்டும் இல்லாவிட்டால், இந்த நாடே இன்னோர் பாகிஸ்தானாக அல்லது ஆப்கானிஸ்தானாக மாறி இருக்கும். ஹிந்து மதம் தான் இந்த நாட்டின் ஆணிவேர். அதற்கு பல சமுதாயங்கள் உதவி உள்ளது. அதில் நீங்கள் ஒரு முக்கிய பங்கு என்பதை எல்லாருக்கும் எடுத்து சொல்லுங்கள்.


Svs Yaadum oore
செப் 07, 2025 12:49

EWS RESERVATION என்பது பிராமணர்கள் மட்டும் கிடையாது .... செட்டியார் வெள்ளாளர் என்று மேலும் பல ஜாதிகள் உண்டு ... அவர்கள் எண்ணிக்கை குறைவு ...EWS என்றாலே பிராமணர்கள் என்று மாயை உருவாக்கி அதை கொடுக்க விடாமல் செய்தது விடியல் திராவிடம் ....


GMM
செப் 07, 2025 12:17

தன்னை மேம்படுத்த குடும்பத்தை, தன் சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும். சமுதாய ஒருங்கிணைப்பு, கட்டுபாடு வேண்டும். கலப்பு திருமணம், மறுமணம் கூடாது என்று சமுதாய முடிவை சுய கட்டுபாட்டில் ஏற்க வேண்டும். மத சார்பற்ற சட்டத்திற்கு சமுதாய அமைப்பு பிடிக்காது. கோவில் பணிகளுக்கு ஒரு குழு. வேத பாடசாலைக்கு ஒரு குழு. வாரிசு இல்லாத சொத்தை வாங்கி , சமுதாய பொது நலம் போன ஒரு குழு. தேசிய அளவில் சமுதாய ஒருங்கிணைப்பு குழு. பின் தான் தொழில் முனைவோர், பிற சேவைகள் பிரிவு ஊக்கம். மனிதன் உணரக்கூடிய ஆன்மீகம் வளர வேண்டும். பிராமணர்கள் தான் அமைதி நிலவ வளர்க்க முடியும்.


Moorthy
செப் 07, 2025 10:48

உலக அளவில் என்றுமே செழித்தோங்கும் தொழில் ஹோட்டல் பிராமணர்களின் சைவ உணவுக்கு எல்லா நாட்டிலும் டிமாண்ட் அதிகம் அமெரிக்காவில் மோட்டல் துறையில் குஜராத்திகள் கோலோச்சுவதை போல் , பிராமணர்களும் உலகெங்கும் செழிக்க ஹோட்டல் ஒரு சிறந்த துறை


Sundar R
செப் 07, 2025 10:40

தமிழகத்தில் இருக்கும் பத்து பிராமண சங்கங்களும், திமுக சொம்புகளாகவும், திமுக ஜால்ராக்களாகவும் இருக்கின்றன. இப்படி இருந்தும், திமுக EWS RESERVATION - ஐ இன்னும் அமல்படுத்தவில்லை. 58 வருடங்களாக 0தேர்தலில் போட்டியிட பிராமணர்களுக்கு திமுக ஒரு சீட்டைக் கூட கொடுத்ததில்லை. பிராமணர்களுக்கு என்று எந்த ஒரு நன்மையையும் செய்ததில்லை. பிராமண சங்கங்களின் தலைவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி ஒன்று உண்டு. தமிழகத்தில், வேத பாடசாலைகள் DILAPIDATED CONSTITUTION - ல் இருக்கக்கூடிய கட்டடங்களாகத் தான் பல இடங்களில் இருக்கின்றன. அங்கு வேதம் பயிற்றுவிக்கும் ஆச்சார்யர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய்க்கும் கீழே தான் மாத வருமானம். இதை வைத்துக் கொண்டு வீட்டு வாடகை கொடுத்து அவருடைய மனைவி மக்களுடன் வாழ முடியுமா? அங்கு வேதம் படிக்கும் வித்யார்த்திகள் உண்டுறை பாடசாலைகளில் தங்கி படிக்கிறார்கள். மழைநீர் ஒழுகும் ஒரே அறைக்குள் அனைத்து வித்யார்த்திகளும் கொசுக்கள் , பூச்சிகளின் தொந்தரவுகளோடு இரவில் துயில் கொள்கிறார்கள். வேத பாடசாலையில் அனைவருக்கும் உணவு தயாரிப்பு பணியில் அதிகாலை முதல் இரவு வரை கடுமையாக உழைக்கும் சமையல் கலைஞர்களுக்கும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்க்கும் கீழே தான் வருமானம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, வேத பாடசாலையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, மிகவும் சொற்ப வருமானம். வித்யார்த்திகள் படிப்பதற்கு புத்தகங்களும், போட்டு பேனாக்கள் கொடுக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், சீர்காழி போன்ற இடங்களில் காஞ்சிபுரம் ஸ்ரீ மடமும், செங்கோட்டை போன்ற இடங்களில் ஸ்ருங்கேரி சங்கர மடமும் ஒருசில வேத பாடசாலைகளை ஓரளவு நல்ல முறையில் நடத்தி வருகிறார்கள். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் மூலமாகத் தான் வேத பாடசாலைகளுக்கு மேற்கூறிய செலவினங்களை செய்து வருகிறார்கள். அதுவும், போதுமானதாக இல்லை. மேற்கூறிய அனைத்திற்கும் காரணம் பொருளாதார பிரச்சினை தான். மத்திய அரசின் உதவி இருந்தால், அது சரியாகிவிடும். பாராளுமன்றத்தில் உள்ள எம்பிக்களான நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், தேஜஸ்வி சூர்யா, நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்கூர், பியூஷ் கோயல், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் சர்மா ஆகியோர் பெருமுயற்சி செய்து, அரசியல் அமைப்புச் சட்டத்தில், அமெண்ட்மென்ட் செய்து, நம் நாட்டின் கலாச்சார அடையாளமாக பல நூற்றாண்டுகளாக இருக்கக்கூடிய வேத பாடசாலைகள் , தற்போது நலிவுற்ற நிலையில் இருக்கும் வேத பாடசாலைகளும், வாழ்வாதாரமே இல்லாத நிலையில், மிகுந்த ஏழ்மையில் இருக்கும் வேத பாடசாலைகளின் ஆச்சார்யாக்கள், வித்யார்த்திகள், சமையல் கலைஞர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் நலம் பெறுவார்கள். திமுகவுக்கு சொம்படித்து, ஜால்ரா போடும் பிராமண சங்கங்களால் மேற்கூறிய கடினமான காரியங்களை செய்ய இயலாது. இந்த திமுக சொம்புகளுக்கு, ஒரு திமுக காரன் கூட ஒரு துரும்பையும் கிள்ளிக் கீழே மாட்டான். திமுகவுக்கு சொம்பு போடும் இவர்கள் தேவையா? அல்லது தமிழகத்திற்கு திமுகதான் தேவையா? எனவே, திமுக சொம்புகள் அல்லாத இதர பிராமணர்கள் அனைவரும் மேற்கூறிய விஷயத்தில் முயற்சி செய்து, வேத பாடசாலைகளையும், அங்குள்ள காம்யார்த்திகளையும், வித்யார்த்திகளையும் வாழவைக்க வேண்டும்.


Moorthy
செப் 07, 2025 10:40

கஸ்துரி, சு சாமி, எஸ் வீ சேகர், அனிருத், முக்கியமாக கமல் இவர்களை அழைக்க வில்லையா ?


vbs manian
செப் 07, 2025 10:19

பிராமணர்கள் காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும். தங்களது சுய கௌரவத்துக்காக குரல் கொடுக்க வேண்டும். பணிந்து தாழ்ந்து ஒடுங்க வேண்டிய அவசியமில்லை. ரௌத்திரம் பழகு என்று பாரதியே சொன்னார். கலை அரசியல் வணிகம் அறிவியல் எல்லாத் துறைகளிலும் முனைந்து தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். சாத்தியப்பட்டால் ஒரு தனி கட்சி ஆரம்பிக்கலாம்.


Artist
செப் 07, 2025 08:51

1960களில் மும்பைக்கு வேலை தேடி சென்ற தமிழர்களுக்கு இலவசமாக சாப்பாடு போட்டு தங்க இடம் கொடுத்து வேலை வாங்கி தருவதற்கும் முயற்சி எடுத்தார்கள் மாடுங்கா பிராமின் அஸோஸியேஷன் மற்றும் சவுத் இந்தியா கான்செர்ன் …நிறைய தமிழர்கள் பயனடைந்தவர்கள்


சமீபத்திய செய்தி