மேலும் செய்திகள்
தரங்கம்பாடி கோட்டையில் இருந்த 17ஆம் நூற்றாண்டு வாள் மாயம்
40 minutes ago
இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
3 hour(s) ago | 37
சிவகங்கை: ''தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வருவதற்குள் தி.மு.க.,வைச் சேர்ந்த பாதி அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள்,'' என, சிவகங்கையில் பா.ஜ., தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழகத்தில் முதன் முறையாக பா.ஜ., தலைமையில் அமைய உள்ள கூட்டணி வரும் லோக்சபா தேர்தலில் பெரிய வெற்றி பெறும். இண்டியா கூட்டணி கலகலத்து போய் உள்ளது. கேரளாவில் காங்., கம்யூ., ஒன்றாக போக முடியாது. இண்டியா கூட்டணி இயற்கைக்கு புறம்பானது.அயோத்தி ராமர் கோயில் கும்பாபிேஷகம் அன்று தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் விசேஷ பூஜை செய்து கும்பாபிேஷகத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அறநிலையத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்க வேண்டும். தமிழகத்தில் அடுத்த சில மாதங்களுக்குள் ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை உருவாகும் என்ற சந்தேகம் எழுந்து0ள்ளது. தமிழகம் திவாலாக கூடிய மாநிலமாக உருவாகி கொண்டிருக்கிறது. தமிழகத்தை கொள்ளை அடித்ததற்கு பெயர் திராவிட மாடல் என்றார்.
40 minutes ago
3 hour(s) ago | 37