உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைகொடுத்தது தென்மேற்கு பருவமழை; நீர் மின் உற்பத்தி 260 கோடி யூனிட்டாக உயர்வு

கைகொடுத்தது தென்மேற்கு பருவமழை; நீர் மின் உற்பத்தி 260 கோடி யூனிட்டாக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை நன்கு பெய்ததால், ஏப்ரல் முதல் கடந்த 20ம் தேதி வரை, நீர் மின் நிலையங்களில், 260 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 215 கோடி யூனிட்களாக இருந்தது.

தண்ணீர் தேக்கப்படும்

நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடங்களில், மின் வாரியத்திற்கு, 2,321 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றின் அருகில் உள்ள அணைகளில், மழை காலத்தில் தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு யூனிட் உற்பத்தி செலவு, 75 காசுக்கு கீழ் உள்ளதால் காலை, மாலை மின் தேவையை சமாளிக்க, நீர் மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.போதிய மழை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், நீர் மின் நிலையங்களில் தினமும் சராசரியாக, ஒரு கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய மின்சார ஆணையம், 2023 - 24ல், தமிழக நீர் மின் நிலையங்களில், 422 கோடி யூனிட் நீர் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. அந்தாண்டில் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால், தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால், இலக்கை விட குறைவாக, 370 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தாண்டில் தென்மேற்கு பருவமழை நன்கு இருந்ததால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகம் இருந்தது. எனவே, நீர் மின் நிலையங்களில் உற்பத்தியும் அதிகம் செய்யப்படுகிறது.

நம்பிக்கை

கடந்த ஏப்ரல் முதல் இம்மாதம், 20ம் தேதி வரை நீர் மின் நிலையங்களில், 260 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 215 கோடி யூனிட்களாக இருந்தது. நல்ல மழை பொழிவால், கடந்த ஆண்டை விட, இந்தாண்டில் கூடுதலாக, 45 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய மின்சார ஆணையம் நிர்ணயித்துள்ள, 400 கோடி யூனிட் என்ற இலக்கையும் எட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன், மின் வாரியம் உள்ளது.

இலக்கும், உற்பத்தியும்

ஆண்டு மத்திய மின்சார ஆணைய இலக்கு உற்பத்தி கோடி யூனிட்2020 - 21 404 5382021 - 22 385 5512022 - 23 391 6172023 - 24 422 3702024 - 25 400 அக்., 20 வரை, 215


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
அக் 26, 2024 06:41

அதாவது மின்சார உற்பத்திக்கு தேவையான தண்ணீர் இருக்கும்வரை திராவிடத்துக்கு மின்சாரத்தால் ஆபத்து இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை