உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிறந்தது 2025 புத்தாண்டு: பல்வேறு நகரங்களில் மக்கள் கொண்டாட்டம்

பிறந்தது 2025 புத்தாண்டு: பல்வேறு நகரங்களில் மக்கள் கொண்டாட்டம்

சென்னை: 2024ம் வருடம் முடிந்து 2025 புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரைகளில் இளைஞர்கள், இளைஞிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என கேக் வெட்டியும், டான்ஸ் ஆடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3sqx7fcb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சிறப்பு வழிபாடு

2025 புத்தாண்டை வரவேற்க சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தேவாலயங்களிலும், கோவிலிலும் வழிபட்டனர். இதைத்தவிர நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள், ரிசார்ட்களிலும் மக்கள் ஒன்றாக கூடி புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர்.

மெரினாவில் தடை

புத்தாண்டு கொண்டாட்டத்தை கண்காணிக்க போலீசார், சென்னை நகர் முழுவதும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளனர். வாகன தணிக்கை நடந்தது. சென்னை பொதுமக்கள் மெரினா கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட தடை விதிக்கப்பட்டதால், அங்கு குவிந்த மக்களை போலீசார் வெளியேற்றினர். சென்னை மெரினா கடற்கரை ஒட்டிய காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தவிர, மேம்பாலங்கள் மூடப்பட்டன. ஆம்புலன்ஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீஸ் அனுமதி

புத்தாண்டையொட்டி விடுதி மற்றும் உணவகங்கள், உரிமம் பெற்ற பப் மற்றும் பார்களில் இரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட போலீசார் அனுமதி வழங்கினர்.தமிழகத்தில் சென்னையை தவிர கோவை, சேலம் மதுரை திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Subramanian
ஜன 01, 2025 09:01

ஆங்கில 2025 புத்தாண்டு வாழ்த்துகள்


Kasimani Baskaran
ஜன 01, 2025 08:05

அணைத்து நட்புக்களுக்கும் சொந்தங்களுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு 2025 வாழ்த்துகள்


ديفيد رافائيل
ஜன 01, 2025 00:26

Happy new year 2025


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை