உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுனிதா பூமிக்கு வந்தடைந்தது மகிழ்ச்சி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சுனிதா பூமிக்கு வந்தடைந்தது மகிழ்ச்சி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்தடைந்த செய்தி அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசினார். இது குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இவர்களது உடல்நிலை பாதிக்கப்படும் எனவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும், பல தகவல்கள் வெளிவந்தன. இருந்தும் விண்வெளி மையத்தில் அவர்கள் தங்களது அயராது பணிகளை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் பால்கன் 9 ராக்கெட் உடன், டிராகன் என்ற விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தை சென்று அடைந்தது. இதன் மூலமாக சுனிதா வில்லியம்ஸ், புல்ட் வில்மோர், மேலும் இரண்டு விண்வெளி வீரர்களுடன் புளோரிடா அருகில் பத்திரமாக கடலில் தரையிறங்கினர். அவர் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி நாம் அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இத்தருணத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கும் நமது மனதார பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Venkatesh
மார் 19, 2025 21:54

ஊபிகள் கிளம்பி வருவார்கள்... தளபதி தான் நாசாவுக்கு கடிதம் எழுதினார் என்று... நீட்டுக்கு கடிதம் போட்டு ...... விட்டார்கள்.... இனிமேல் ஸ்டிக்கர் ஒட்டும் மாடலை கேள்வி கேட்க வேண்டும்


Venkatesh
மார் 19, 2025 21:41

மானங்கெட்ட மாடல் மானங்கெட்ட பொழப்பு..... சொந்த புத்தியும் இல்லை....சொல் புத்தியும் இல்லை.... அடாவடியும்..... ஆணவமும் தான்... துரத்தி அடிக்கப்பட போகும் மாடல்


vbs manian
மார் 19, 2025 19:58

நாங்கள்தான் டிரம்புக்கு அழுத்தம் கொடுத்து எலன் மஸ்கை முடுக்கிவிட்டு ஒரு வீர பெண்மணியை காப்பாற்றி அழைத்து வந்தோம் என்று அறிக்கை விடவில்லை.


Bahurudeen Ali Ahamed
மார் 19, 2025 19:43

சுனிதா பூமி திரும்பியதற்கு நமது பிரதமரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 19, 2025 17:15

தமிளர்கள் மாண்புப்படியும் கலாச்சாரப்படியும் பாரம்பரியப்படியும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அவர்களை பத்திரமாக பூமிக்கு இறக்க அனைத்து முயற்சிகளையும் ஓய்வின்றி செய்த எங்கள் டாஸ்மாக் நாட்டு தவப்புதல்வர் அப்பா அவர்களுக்கு இந்த மாமன்றத்தில் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றலாமே


எவர்கிங்
மார் 19, 2025 16:01

உங்கள் RSB மீடியாக்களை விட்டு ஒன்றிய அரசு ஓரவஞ்சனை குறித்து கேள்வி எழுப்பச் சொல்லுங்க.... விடியலின் பெரியாரின் சமத்துவ சம்முகபேதிக்கு கிடைத் வெற்றி என அறிவிச்சுடுங்க பாஸ்


த.கண்ணதாசன்,நாட்டுச்சாலை
மார் 19, 2025 13:40

முதலில் சுனிதா வில்லியம்ஸ் யாருனு கேளுங்க...


Bhakt
மார் 19, 2025 13:22

பரவாலயே...துண்டு சீட்டை பார்த்து பிழை இல்லாமல் படிச்சிட்டாரே நம் நைனா


Ramesh Sargam
மார் 19, 2025 13:12

சுனிதா வில்லியம்சை நான் அன்றே பூமிக்கு அழைத்து வந்திருப்பேன் என்னுடைய பெண்கள் இலவச பஸ்ஸில். ஆனால் மத்திய அரசு எனக்கு அனுமதி அளிக்கவில்லை. - முதல்வர் ஸ்டாலின்


Sara
மார் 19, 2025 13:10

ஒருத்தரையும் விடமாட்டார் போலயே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை