உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்துறையை கட்டுப்பாட்டில் வைக்காமல் செயலிழந்து விட்டாரா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

உள்துறையை கட்டுப்பாட்டில் வைக்காமல் செயலிழந்து விட்டாரா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழக அரசின் உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாமல் செயலிழந்து விட்டாரா முதல்வர் ஸ்டாலின்'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27ம் தேதி, நவீன் மீது புகாரளித்த நிலையில்,இரண்டு வாரங்களாகியும், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யாமல், துணை கமிஷனரே நேரடியாக விசாரித்து வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. துணை கமிஷனர் பாண்டியராஜன் தற்போது விடுமுறையில் சென்றிருப்பதும் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

உள்துறை

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், உண்மையில் காவல்துறை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை. தமிழக அரசின் உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாமல் செயலிழந்து விட்டாரா முதல்வர் ஸ்டாலின். உங்கள் பொறுப்பற்ற செயல்பாடுகளால் இன்னும் எத்தனை சட்ட மீறல்களைப் பொதுமக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்?

நியாயமான விசாரணை

உங்கள் நிர்வாகத் தோல்விகளுக்கு, வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா? உடனடியாக, நவீன் மரணம் குறித்த நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், இரண்டு வாரங்களாக வழக்குப் பதிவு செய்யாமல், நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிய கொளத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

R.P.Anand
ஜூலை 11, 2025 09:26

ஒட்டுக்கு ஆயிரம் கொடுத்தா கவுன்சிலர். அவன் அவனுக்கு வந்தா தான் தெரியும்.


pmsamy
ஜூலை 11, 2025 09:11

ஏன் தலைவர் பதவியிலிருந்து தூக்கினார்கள்


K.n. Dhasarathan
ஜூலை 10, 2025 21:08

அண்ணாமலை தமிழக முதல்வர் உள்துறையை கட்டுப்பாடுடன் நடத்தி, குற்றம் செய்தவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தண்டித்து வருகிறார். ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சர் என்ன செய்கிறார்? பெஹல்காம் தீவிர வாதிகளை பிடித்தீர்களா ?எப்படி அவ்வளவு தூரம் நம் நாட்டிற்குள் வர முடிந்தது? இனிமேலாவது இது போல நடக்காது என்று உறுதி தர முடியுமா ? ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் ?


Naga Subramanian
ஜூலை 11, 2025 21:44

தங்களது கேள்வி ரூ.200-க்காக பரிந்துரைக்கப்படுகிறது. கூடிய சீக்கிரம் கிடைத்துவிடும். கவலை கொள்ளற்க


Ramesh Sargam
ஜூலை 10, 2025 20:46

எந்தத்துறையும் முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் கட்டுப்பாட்டில் முதல்வர்.


Mario
ஜூலை 10, 2025 18:42

முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க.


vivek
ஜூலை 10, 2025 21:41

மணிப்பூர் போகலையா


G Mahalingam
ஜூலை 10, 2025 17:02

காவல் துறை பேரம் பேசும் துறையாக மாறி விட்டது. உள்ளுக்குள்ளேயே நேரம் பேசி கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் நிலையை திராவிட மாடல் ஆட்சி கொண்டு வந்துள்ளனர். இதில் கட்டுமர குட


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 10, 2025 16:50

மாடல் அரசு மக்கள் தொகையை குறைக்க குறுக்கு வழியில் இறங்கிடுச்சோ .. இனிமேல் தேர்தல் அறிக்கையிலேயே வருடத்திற்கு குறைத்து ஐம்பது லாக்கப் டெத் நடக்க ஆவண செய்வோம் " என்று சொல்லிவிடுவார்கள் ..


D.Ambujavalli
ஜூலை 10, 2025 16:26

எத்தனை எத்தனையோ இருட்டு உருட்டுகளுக்கு ஏவியதால் இப்போது போலீசை கண்டிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாமல் அவிழ்த்துவிட்டு விட்டார் மெல்ல மெல்ல அவர் வளர்த்த சிங்கம் அவர் மேலேயே பாயும் காலம் வெகு தூரத்தில் இல்லை கட்சியில் இருக்கும் சில்லறைகள் கூட தன்னிச்சையாகப் போலீசுக்கு உத்தரவிட்டு அராஜகம் நிகழ்த்துவதை பாதிக்கப்பட்டவருக்கு வெறும் sorry மூலம் வாயடைக்க முடியுமா?


Barakat Ali
ஜூலை 10, 2025 15:11

ஒரு பேச்சுக்கு திமுக உருட்டுற மாதிரி நிகிதா பாஜக ஆதரவாளர்ன்னே வெச்சிப்போம் .... ஒரு தீவிர எதிர்கட்சியோட ஆதரவாளர் பேச்சை கேட்டு ஒரு கூடுதல் ஏடிஜிபி மூலமா அந்த பகுதி டிஎஸ்பிக்கு உத்தரவு போய், தனிப்படையை அனுப்பி ஒரு அப்பாவியை அடிச்சி கொல்ற அளவுக்காடா காவல்துறை உங்க கட்டுபாட்டுல இல்லாம உங்க தீவிர எதிரியோட கட்டுபாட்டுல இருக்கு ???? தனக்கு கீழ இருக்குற ஒரு துறையைவே ஒழுங்கா நிர்வாகம் பண்ண தெரியாதவரா நல்லாட்சியை தந்து கொண்டிருக்கிறார் அல்லது தரபோகிறார் என உருட்டுறீங்க ????


JANA VEL
ஜூலை 10, 2025 14:42

முதல்வர் என்ன செய்வார் பாவம் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை