உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 20 கிலோ தங்க கட்டிகளை விற்று எம்.பி.,க்கு பணமாக தந்தோம்: ஹவாலா புரோக்கர்கள் வாக்குமூலம்

20 கிலோ தங்க கட்டிகளை விற்று எம்.பி.,க்கு பணமாக தந்தோம்: ஹவாலா புரோக்கர்கள் வாக்குமூலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'லோக்சபா தேர்தலின்போது, புதுச்சேரி பா.ஜ., - எம்.பி., செல்வகணபதிக்கு, 20 கிலோ தங்கக் கட்டிகளை விற்று பணமாகக் கொடுத்தோம்' என, சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஹவாலா புரோக்கர்கள், சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கேற்ப, சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த, நயினார் நாகேந்திரன் ஹோட்டல் ஊழியர் உள்ளிட்டோரிடம், 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.அந்த பணம் யாருடையது என்பது குறித்து, நயினார் நாகேந்திரன், அவரது உதவியாளர் மணிகண்டன், பா.ஜ., அமைப்பு செயலர் கேசவவிநாயகன் உட்பட, 20 பேரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்துள்ளனர். அதன் அடிப்படையில், பா.ஜ.,வைச் சேர்ந்த புதுச்சேரி எம்.பி., செல்வகணபதி மற்றும் ஹவாலா புரோக்கர்களான, சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த சூரஜ் மற்றும் பங்கஜ் லால்வானி ஆகிய மூவரும், அக்., 25ல், சென்னை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்பட்டது.முழங்கால் அறுவை சிகிச்சை செய்திருப்பதால், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, செல்வகணபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சூரஜ் மற்றும் பங்கஜ் லால்வானி ஆகியோரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறியதாவது:விசாரணையின்போது, சூரஜ் மற்றும் பங்கஜ் லால்வானி ஆகியோர், தங்கக் கட்டிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகக் கூறினர். அதற்கு முறையான ரசீது மற்றும் ஆவண பதிவுகள் எதையும் அவர்கள் பின்பற்றுவது இல்லை.முதலில், ஒரு கோடி ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்ததாக கூறினர். விசாரணையை சற்று கடுமையாக்கியதும், பா.ஜ., - எம்.பி., செல்வகணபதி, 20 கிலோ தங்கக் கட்டிகளை விற்று பணமாக தருமாறு கூறியதாகவும், அதன்படி, பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள நகை வியாபாரியிடம், 15 கிலோ தங்கக் கட்டிகளை விற்றதாக கூறினர். மீதமுள்ள, 5 கிலோ தங்க கட்டிகள் புதுச்சேரியில் விற்கப்பட்டுள்ளன.தேர்தல் செலவுக்காக தான் தங்கக் கட்டிகளை விற்றுக் கொடுத்ததாக, இருவரும் கூறுகின்றனர். தமிழக பா.ஜ., நிர்வாகி கோவர்தனின் டிரைவர் விக்னேஷிடம், சூரஜ் அடிக்கடி பேசியதற்கான ஆதாரங்களும் சிக்கி உள்ளன.சூரஜ், பங்கஜ் ஆகியோர், 20 கிலோ தங்கக் கட்டிகளை விற்று பணமாகக் கொடுத்தது பற்றி, செல்வகணபதியிடம் விசாரிக்க வேண்டி உள்ளது. அப்போது தான், உண்மை தெரியவரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Minimole P C
டிச 21, 2024 08:30

CBCID is under the control of the great police minister, the CM himself. What you can expect other than this?


சாண்டில்யன்
டிச 20, 2024 20:19

இதுதாண்டா தேசப்பற்றுங்கறது


Jebamani Mohanraj
நவ 24, 2024 05:21

அதானிக்கு வாரண்ட்,நயினார் நாகேந்திரன் தங்ககட்டி. பெரிய சதி நடக்குது நாட்டில் வேறு எந்த குற்றமும் நடக்காதது போல் ஒரு நாடகம்


Vasanthi Murugan
நவ 23, 2024 15:52

சூப்பர்


தஞ்சை மன்னர்
நவ 23, 2024 12:35

இங்கே கருத்து கூறி இருக்கும் சங்கிகள் அப்படி பார்த்தல் இதுவரை இஸ்லாமியர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஹவாலா வழக்குகள் யாவும் செட்டப்பா அப்பவும் சொல்லுவோம் இப்பவும் சொல்லுவோம் இஸ்லாமியர்கள் அம்புகள் மட்டுமே கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இதற்க்கு பின்னல் இருக்கும் மார்வாடி பனியா கும்பலின் கைவரிசை யார் கட்டுப்படுத்துவது இப்போதுதான் முதல் வழக்கில் இந்த வட இந்திய கும்பல் முகம் தெரிகிறது இன்னும் வரும் இதற்க்கு பின்னால் இருக்கும் 52 இஞ்சி முகம் சார்த்த கும்பலின் கைவரிசை தெரியவரும்


Tetra
நவ 23, 2024 13:39

ஏம்பா 20 கிலோ தங்க கடி 4 கோடிதானா? இதிலிருந்தே தெரியலயா உங்க லட்சணம்


Ganesun Iyer
டிச 20, 2024 20:02

மார்கத்துக்காரருக்கு வாழ்த்துக்கள்


venugopal s
நவ 23, 2024 10:49

யோக்கியன் வந்து விட்டான், சொம்பை எடுத்து உள்ளே வையுங்கள்!


panneer selvam
நவ 23, 2024 10:36

it is not surprise . In India coning an election is a costly affairs where you have to spend a fortune in cash in a span of 30 days . Every conant of leading parties has to spend not less 10 crores in a parliament while 5 crore in an assembly seat . How to gather this amount . Just remember what Ex AIADMK Minister Srinivasan said a couple of days ago , every alliance partner with vote share of 2 to 3 % demands not less than 50 to 100 crores for an election . So no one holiest in Indian election .


Dharmavaan
நவ 23, 2024 08:51

பிஜேபி மேல் அவதூறு கிளப்ப ஜோடிக்கப்பட்ட கதை இது


S.L.Narasimman
நவ 23, 2024 08:07

அந்த கேஸ் பைலை அண்ணாமலைகிட்ட கொடுங்க. ஊர்ஊரா தூக்கிட்டு ஊர்வலம் போவாரு.


தமிழ் மைந்தன்
நவ 23, 2024 07:50

ஊழலை பற்றி ஊழல் திமுக பேசுவது ??????


முக்கிய வீடியோ