உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த மக்களை வெளியேற்ற உயர்நீதிமன்றம் தடை

விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த மக்களை வெளியேற்ற உயர்நீதிமன்றம் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு மக்களை வீடுகள், நிலத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.மதுரை சின்ன உடைப்பு மலைராஜன் உட்பட 258 பேர் தாக்கல் செய்த மனு: அயன்பாப்பாகுடியின் சின்ன உடைப்பு கிராமத்தில் 350 குடும்பங்கள் உள்ளன. விவசாயத்தை சார்ந்துள்ளனர். மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக எங்கள் பகுதியில் ஏற்கனவே 2 முறை நிலம் கையகப்படுத்தப்பட்டது. 200 குடும்பங்கள் வீடுகளை இழந்தன. அருகில் அவர்களுக்கு வீடுகள் அமைக்க பிளாட்கள் ஒதுக்கப்பட்டது. வீடுகள் அமைக்க முயற்சிக்கும் சூழலில், அங்கு விமான நிலை விரிவாக்கப் பணி துவங்க உள்ளது. யாரும் புதிதாக வீடு கட்ட வேண்டாம் என அரசு தரப்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. இதனால் யாரும் வீடு கட்ட முடியவில்லை. பிளாட்களை விற்கவும் முடியவில்லை.சட்டப்படி மறு வாழ்வு, மறு குடியமர்வு, பள்ளி, கோயில், மைதானம், மயானம் அமைத்தல் உள்ளிட்ட வசதிகளை அரசு செய்துதர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் படித்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும். அதன் பின்தான் நிலத்தை கையகப்படுத்த வேண்டும்.நிலத்திற்கு இழப்பீடு வழங்கியது போதுமானதல்ல. சட்டம், விதிகளை பின்பற்றாமல் எங்களை வீடுகள், பிளாட்கள், பட்டா நிலத்திலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மறு வாழ்வு, மறுகுடியமர்விற்கு ஏற்பாடு செய்யாமல் எங்களை வீடுகள், நிலத்திலிருந்து வெளியேற்ற தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.அவசர வழக்காக நீதிபதி என்.மாலா விசாரித்தார்.தமிழக அரசு தரப்பு: நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து, சம்பந்தப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அவர்களை வெளியேற்ற நோட்டீஸ் அளிக்கவில்லை. சட்டப்படி நோட்டீஸ் அளித்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: சட்டம், விதிகளை அரசு தரப்பில் பின்பற்றாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தமிழக வருவாய்த்துறை முதன்மைச் செயலர், நில நிர்வாக கமிஷனர், மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை டிச.11 க்கு ஒத்திவைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

veeramani
நவ 21, 2024 09:32

தமிழக படித்த இளைஞர்களை எவராவது கவனிக்கிறார்களா??? தென் தமிழ்நாத்தில் படித்த இளனர்கள் மிக் அதிக . படித்துவிட்டு வேலைக்காக சென்னை, கோவை திருப்பூர் நகரங்களுக்கு செல்கின்றனர். சிலர் மும்பை பெங்களூர் ஹைதராபாத் போகின்றனர். தெண் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லவேயில்லை லேபிட் கம்யூனிஸ்ட்கள் சின்னஉடப்பு மக்களை ஏமாற்றி போராட்டத்தை துடிவிடுகிறார்கள். இவர்களை மக்கள் முதலில் துரத்தவேண்டும்/ நாயகன் சினிமா வசனம் போல் நுறு மக்கள் வாழ நான்கு பேர் செத்தாலும் கவலையில்லை . மதுரை , உலகிற்கு பரிச்சயம் ஆகா வியாபாரம் செழிக்க விமான ஊடுபாதைக்கு இடம் கொடுங்கள்


Dhandapani
நவ 21, 2024 07:47

ஏன்யா அவன் அவன் கஷ்டப்பட்டு ஒரு இடம் வாங்கி வீடுகட்டி அதுவே வாழ்நாள் சாதனையா ஒக்காந்தா, நாடு வளர்ச்சியடையவேணும்தான் அதுக்காக ஏழைகள் வாழ ஒருவீடு அரசு முறையை கொடுக்கணும் விவசாயம் பண்ற விவசாயிக்கும் அரசு ஒரு வேறுஒரு இடத்தில விவசாயம் செய்ய நிலம் ஒதுக்கிதறாம ஏதோ அனாதைகள் மாதிரி போனாப்போகுதுனு கொடுப்பீங்க எதுத்துக்கேட்ட நாங்கள் எல்லாம் சீனாக்காரன் மாதிரி பேசுவீங்க, ஒட்டு போட்டோமுல்ல எதையும் பேசுவீங்க, இப்படி பேசுறவங்கள சின்னஉடைப்பில கொண்டுபோய் விடுங்க நிலைமை புரியும்


raja
நவ 21, 2024 07:06

இந்த கேடுகெட்ட விடியல் தான் வேனுமுண்ணு கேவலம் ருவா 2000 ஒசி குவார்டரு கோழி பிரியாணிக்கு ஆசைப்பட்டு ஒட்டு போட்டீங்கள்ள இப்போ அனுபவித்த மக்கா.. எங்கே பாடுங்க ஸ்டாலிந்தான் வர்றாரு.. விடியல் தான் தற்றாரு...ஹா..ஹா...


M Ramachandran
நவ 21, 2024 03:41

ஆரம்பிச்சு ட்டாங்கையா ஆரம்பிச்சு. தமிழ் நாட்டில் ஒரு முன்னேற்றமும் தேவையில்லை.பின்புலம் வேலையில்லா கம்யூனிஸ்டுக்கள். சீனா காரன் ஆரம்பித்தால் ஆதரவு. இல்லையென்றால் முட்டுக்கட்டை. இதனால் பல கம்பெனிகள் மூடிவிட்டு குஜராத் ஆணந்தரா கர்நாடகா ஓடி விடுகிறது. விடியாமூஞ்சி விடியல் டிராவிடா அரசு நடக்குது என்று மார் தட்டிக்கொண்டிருக்கு


முக்கிய வீடியோ