உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதவியை மறந்து விட்டார்; அரசியல்வாதியாக செயல்படும் கவர்னர்; அமைச்சர் ரகுபதி காட்டம்!

பதவியை மறந்து விட்டார்; அரசியல்வாதியாக செயல்படும் கவர்னர்; அமைச்சர் ரகுபதி காட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' கவர்னர் ரவி, தனது பதவியை மறந்துவிட்டு அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ,'' என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை காந்தி மண்டபத்தில், நேற்று கவர்னர் ரவி துாய்மை பணியில் ஈடுபட்டார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''காந்தி மண்டப வளாகத்தில், மது பாட்டில்கள் கிடந்தது வருத்தம் அளிக்கிறது,'' என வேதனை தெரிவித்தார்.இந்நிலையில், சென்னையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது: கவர்னர் ரவி தனது பதவியை மறந்துவிட்டு அரசியல்வாதி போல் செயல்படுகிறார். மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை துண்டிக்கும் வகையில் செயல்படுவதுடன் கவர்னர் மாளிகையை அரசியல் பவனாக மாற்றுகிறார்.தமிழகத்தில் பா.ஜ., அலுவலகமான கமலாலயத்துக்கு போட்டியாக உள்ள ஒரே இடம் கவர்னர் மாளிகை தான். ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தூதுவர் போலவும், நீட் தேர்வுக்கு ஒரு பிஆர்ஓ போலவும் செயல்படுகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.காந்தி மண்டபத்தை சுத்தம் செய்த கவர்னருக்கும், கேமராமேன் கண்களுக்கும் மதுபாட்டில் தெரிந்துள்ளது. அதிகம் குப்பை சேரக்கூடிய மெரினா கடற்கரையை கூட தூய்மையாக வைத்துள்ளோம். சுத்தம் செய்யும் பணிகளை சென்னை மாநகராட்சி சிறப்பாக செய்து வருகிறது.மதுவை தமிழக அரசால் மட்டும் ஒழித்து விட முடியாது. இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் முடியாது. எல்லா மாநிலங்களும் மது ஒழிப்பை கொண்டு வந்தால் தமிழகத்திலும் கொண்டு வருவோம். மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு தி.மு.க., அரசு. தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாத காரியம். அமல்படுத்துவது மத்திய அரசின் கைகளில் தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Lion Drsekar
அக் 04, 2024 07:21

அடுத்துவரும் குடும்பப் பதவிப் பிரமானத்தின்போது இவருக்கு வருமோ, காத்திருப்பு பயணிகள் போல் இவர் முக்கிய இடத்தில இரயில்வே துறைவினார்கள் கொடுக்கும் டிக்கட் போல் RAC யில் வைக்கப்பட்டு இருப்பார், பாவம் , இவரது முன்னோடிகள் நிலையைக் கண்டும் இப்படி ஒரு நிலையா ,


இராம தாசன்
அக் 03, 2024 21:19

இது மட்டும்தானா - தினம் 10 சம்பவம் நடக்கிறது. அதை பற்றி பேச யாரும் இல்லை


vadivelu
அக் 03, 2024 07:06

அவரும் அணி சபாநாயகர் என்று நினைத்து கொண்டு விட்டார் என்கிறார்.


Kasimani Baskaran
அக் 03, 2024 05:58

இவர்களை வீட்டுக்கு அனுப்பும் அதிகாரமும் கூட மத்திய அரசிடம்தான் உள்ளது.


Mani . V
அக் 03, 2024 05:56

மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை மந்திரி மதுவை விற்பது சரியா? முதலில் அதற்குப் பதில் சொல். பிறகு கவர்னரை விமர்சிக்கலாம்.


RAAJ68
அக் 03, 2024 05:22

ஆளுநர் உண்மை பேசினால் இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தற்போதைய நிலை என்ன? ஏன் கிடப்பில் போடப்பட்டது? சென்னையில் பத்து வயது சிறுமி பாலியல் செய்யப்பட்ட சம்பவம் உங்களுக்கு தெரியுமா. எவ்வளவு சீரியஸ் ஆன விஷயம். யாரும் கண்டு கொள்ளவே இல்லை. இது எல்லாம் உங்கள் துறை சம்பந்தப்பட்டது தானே. இதைப் பற்றி பேசுங்கள். ஆளுநர் அரசியல் செய்கிறார் என்று இவர் அரசியல் செய்கிறார் என்று விஷயத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்.


J.V. Iyer
அக் 03, 2024 05:19

மக்கள் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு வெளியில் சுற்றுவதால் நிறைய அமைச்சர்களுக்கு தைரியம் அதிகமாகி விட்டது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிட்டார்கள். சட்டம் ஒரு இருட்டறை என்வது தெளிவாகிறது.


தாமரை மலர்கிறது
அக் 03, 2024 02:24

அமைச்சர் ரகுபதி கதறி, கதறி அழுவதை பார்த்தால், கலக்கமாக இல்லை. கவலையாக இல்லை. தேன் வந்து பாயுது காதினிலே.


இராம தாசன்
அக் 03, 2024 01:25

பொன்முடியை பார்த்து திருந்துங்க - இல்லை சட்ட அமைச்சர் வேறு எங்காவது மாற்றப்படுவது நிச்சயம்


Raj S
அக் 02, 2024 23:08

ரவுடிகளையும், திருட்டு பசங்களையும் மக்கள் தேர்ந்தெடுத்தால் இவர்கள் இப்டி தான் பேசுவார்கள்... கவர்னர் சொன்னது அந்த இடம் சுத்தம் பண்ணலன்னு இல்ல, அவர் சொன்னது காந்தி எப்படி வாழ்ந்தார், எதற்க்காக வாழ்ந்தார்னு கூட தெரியாத அளவுக்கு நீங்க மக்களை குடிக்க வெச்சு நாசம் பண்றீங்கன்னு சொல்றார்... இதுகூட புரியாத தத்தி அமைச்சர்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை