உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் பதவிக்கான அடிப்படை தகுதியை இழந்து விட்டார்: சட்ட வல்லுநர்கள் சொல்வது என்ன?

அமைச்சர் பதவிக்கான அடிப்படை தகுதியை இழந்து விட்டார்: சட்ட வல்லுநர்கள் சொல்வது என்ன?

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன்: சைவம், வைணவம் இரண்டும் ஹிந்து மதத்தின் முக்கிய பிரிவுகள். இவை சார்ந்த நம்பிக்கைகள் பற்றி, பொது நிகழ்வில் அருவருக்கத்தக்க வகையில் பேசியது சரியல்ல. அவரின் இந்த பேச்சுக்கு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். சைவம், வைணவம் சார்ந்து இருக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனித்தனியே வழக்கு தொடர முடியும்.வழக்கறிஞர் ஆர்.எஸ்.ரவீந்திரன்: அமைச்சர் பொன்முடியின் பேச்சு, ஆபாசமான, அருவருக்கத்தக்கது. அவர் சார்ந்திருக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர் மட்டுமின்றி, வயதிலும் மூத்தவர். அரசாங்கம் என்பது எல்லா மக்களுக்கானது; குறிப்பிட்ட மதம், சமயத்துக்கானது அல்ல. கொள்கை, தத்துவம் எல்லாம் என்பது எப்படி இருந்தாலும், அரசு என்கிறபோது பொதுவானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9mo8mcx5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்படியிருக்கும்போது, பொதுவெளியில் கொச்சையாக, ஆபாசமாக பேசி இருக்கக் கூடாது. கட்சி பதவி பறிப்பு மட்டும் போதாது; பகிரங்கமாக பொதுமக்கள் மத்தியில், அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் சார்ந்து இருக்கும் கட்சி, ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானது என்ற பெயரை, அவர்களின் செயல்பாடு வாயிலாக ஏற்கனவே பெற்றுஇருக்கிறது. கருத்துரிமை என்பது ஆபாசமாகவோ, பெண்களை இழிவுபடுத்தி பேசுவதற்கோ அல்ல. அமைச்சராக இருக்கும்போது, மிகவும் பொறுப்புடன் பேச வேண்டும். பொதுவெளியில் பேசும்போது, இன்னும் கூடுதல் கவனத்துடன் பேசவேண்டும். பொதுவெளியில் மூன்றாம் தரப் பேச்சாளர் போல பேசக்கூடாது. அவரின் பேச்சுக்கு எதிராக குற்றவியல் மற்றும் மானநஷ்ட வழக்கு தொடருவதற்கான முகாந்திரம் உள்ளது.வழக்கறிஞர் நர்மதா சம்பத்: அமைச்சர் என்கிற பொறுப்பில் உள்ளவர், 'இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன்' எனக் கூறித்தான் பதவி ஏற்கிறார். உறுதிமொழி ஏற்றிருக்கும் ஒரு பதவியில் இருக்கும்போது, பொதுவெளியில் இதுபோல பேசியது மிகவும் தவறு. அவ்வாறு பேசியிருக்கவும் கூடாது. தனிப்பட்ட நம்பிக்கை, கடவுள் மறுப்பு என, எதைக் கொண்டிருந்தாலும், சொந்த வெறுப்பு என, எதுவும் இருக்கக் கூடாது.துவக்க காலத்தில் பேராசிரியராக பணிபுரிந்து உள்ளார். அவரின் பேச்சுகளை கேட்கும்போது, அவர் அமைச்சராக நீடிக்கத் தகுதி அற்றவர். அமைச்சர் என்ற பொறுப்புக்கான அடிப்படை தகுதியை இழந்து விட்டார் என்றே கூற வேண்டும்.கல்வி சார்ந்த முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். அப்படியிருக்கும்போது, இதுபோல பேசியது அவரின் கல்வியில் குறைபாடு இருப்பதாகவே தோன்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sridhar
ஏப் 15, 2025 14:30

வெறும் கூச்சல் மட்டும் தானா. நீங்க வக்கீல்கள் தானே, வேறு மாநிலங்களில் fir பதிவு செய்து வழக்கு போடுங்க.


ஆரூர் ரங்
ஏப் 12, 2025 10:33

சட்டமாவது நடவடிக்கையாவது?.திமுக போலீஸ் ஒன்றும் செய்யாது. RSB மன்றம் மந்திரியாக தொடர உத்தரவிடும். அத்துடன் பஞ்சாயத்து கலைந்துவிடும். மானமில்லா ஹிந்துக்கள் 500 வாங்கிக் கொண்டு எதிரிக்கே வாக்களிப்பார்கள். (அ) சுபம்.


PR Makudeswaran
ஏப் 12, 2025 10:32

போட்ட விதைதான் விளையும். வேறு மாற்றி விளையாது. விதையில் குறை வளர்ப்பில் குறை.வழி காட்டியது அண்ணாதுரையும் மு க. வும். அதில் மாபெரும் குறை. காரி துப்ப வேண்டும்.


KRISHNAN R
ஏப் 12, 2025 10:08

நேர்கோட்டு சாய்வு கோடு... மற்ற இடத்திலும் உள்ளதே.. அதை யே ன்.. பேசவில்லை


vbs manian
ஏப் 12, 2025 09:54

மொத தமிழகமும் தலைகுனிந்து நிற்கவேண்டும்.


Yes your honor
ஏப் 12, 2025 09:19

கல்வியில் மட்டும் என்ன குறைபாடு, இவனை பெற்றவன் இவனை வளர்த்த முறையிலும் குறைபாடு உள்ளது. 2ஜி ராஜா, இந்த விளங்காமுடி, சாதிக், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இந்த கூட்டங்களை எல்லாம் பார்க்கும் பொழுது திமுக ஒரு அசிங்கமான கட்சி என்பது புலப்படுகிறது. அந்த கட்சியின் அமைச்சர் மட்டும் என்ன உத்தம சிகாமணியாகவா இருப்பார்?


p.s.mahadevan
ஏப் 12, 2025 09:05

மத வெறி கொண்ட இந்த கும்பலை சட்டம் என்ற போர்வையும் நீதி மன்றங்களும் ஒன்றும் செய்யாது.


Muralidharan S
ஏப் 12, 2025 08:57

மனிதனாக இருப்பதற்கான அடிப்படை தகுதியே எந்த ஒரு திரவிஷன்களிடம் இல்லை..... எல்லோருமே ஆபாச பேசாளர்கள்தான்.. அப்புறம்தான் அமைச்சருக்கான அடிப்படை தகுதி எல்லாம்..


VENKATASUBRAMANIAN
ஏப் 12, 2025 08:25

அப்புறம் ஏன் வழக்கு போடவில்லை. நீதிமன்றமே தானாகவே இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா. வெட்கம் இல்லாமல் அமைச்சர் பதவியில் உள்ளார். இவரும் செந்தில் பாலாஜியும் அமைச்சராக அமைச்சராக இருக்க தகுதியற்றவர்கள். இது ஏன் ஸ்டானிக்கு புரியவில்லை.


Dharmavaan
ஏப் 12, 2025 08:16

பிறவி குணம் ரத்து அணுக்கள் அப்படி கீழ தரம் மாற்றமுடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை