உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார்; துரைமுருகன் மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்!

எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார்; துரைமுருகன் மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்!

சென்னை: 'தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார்' என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பை ஏற்று, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க., கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்' என, அக்கட்சியினருக்கு பொதுச்செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தேனியில் நடந்த கட்சி கூட்டத்தில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் பேசியதாவது:

மேல்முறையீடு

துரைமுருகனின் இந்த அறிவிப்பு, எங்களை போன்றவர்களை பெரிய இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறது. குறைந்தபட்சம் அரசியல் கட்சிகளுக்கு எதிரான இந்த தீர்ப்பு சம்பந்தமாக, மாநில அரசே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கலாம். மேல்முறையீடு செய்யவில்லை. குறைந்தபட்சம் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை அழைத்து, உயர்நீதிமன்றத்தில் இப்படி உத்தரவு வந்து இருக்கிறது என்ன செய்யலாம். இதை ஏற்பதா? நிராகரிப்பதா? அல்லது மாற்றுவழி என்ன? என்பது குறித்து கலந்து ஆலோசித்து இருக்கலாம். இப்படி எந்த அணுகுமுறையும் மேற்கொள்ளாமல், தன்னிச்சையாக, நாங்களே கொடிகளை எல்லாம் அகற்றி கொள்கிறோம் என கூறியுள்ளார். அந்த உத்தரவில் என்ன இருக்கிறது என்றால், 12 வாரங்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்றவில்லை என்றால் போலீசாரே அகற்றிவிட்டு, அதற்கான கட்டணத்தை கட்சியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

என்ன காண்டு?

இந்த அரசியல் கட்சிகள் மேல், நீதிபதிகளுக்கு எல்லாம் என்ன காண்டு என்று தெரியவில்லை. சமீப காலமாக ரொம்ப மோசமாக எல்லை மீறி போய் கொண்டு இருக்கிறார்கள். நான் கேட்பது, சமீப காலமாக தி.மு.க.,வுக்கு இது சொந்த பிரச்னையா? தி.மு.க.,விற்கு மட்டுமான பிரச்னையா இது, குறைந்தபட்சம் கலந்து பேச வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா? எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.

10 என்றால் 150!

எங்களுக்கு 10 கொடிகம்பங்கள் இருக்கு என்றால், உங்களுக்கு 150 கொடிகம்பங்கள் இருக்கிறது. அரசியல் கட்சி என்றால் அதற்கு என்று கொடி, இது எல்லாம் ஏற்கனவே சட்டத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் விஷயம். போக்குவரத்திற்கு இடையூறாக இருக்க கூடாது என்று சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

நக்கல், நையாண்டி

போக்குவரத்திற்கு இடையூறாக யாராவது ஒரு கொடிகம்பத்தை ஏற்றுகிறார்கள், நடுகிறார்கள் என்று சொல்லுங்கள் அதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. துரைமுருகன், 'நான் எனது கட்சி காரர்களுக்கு சொல்கிறேன், நீ ஏன்யா கேள்வி கேட்கிற' என்று சொல்லலாம். என்னை பார்க்கும் போது கேட்கலாம். அவரு அந்த மாதிரி எல்லாம் கொஞ்சம் நக்கல், நையாண்டி எல்லாம் பேசுகிற தலைவர் தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

balakrishnankalpana
மார் 22, 2025 17:32

விலைவாசி வின்னைதொட்டு விழி பிதுங்கி விக்கித்து நிற்கிறோம், அக்காலத்தில் 10 பைசா விலை அதிகம் என்றாலும் கம்னிஸ்ட் போராடும்.. ஆனால் இன்று,, கம்ன்னுஸ்டு கம்னு கெடுக்குது


Gajageswari
மார் 22, 2025 17:10

நீதிமன்ற உத்தரவை ஏற்று கொள்ள வேண்டும்.


Saleemabdulsathar
மார் 21, 2025 14:49

நீதி மன்ற தீர்ப்பை மதிக்கவேன்டும் கட்சி கொடிக்கம்பம் கல்வெட்டுக்கள் மற்றும் மத அடையாளங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் எந்த ஒரு ஆக்கிரமிப்பும் அகற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது


ராமகிருஷ்ணன்
மார் 21, 2025 07:25

என்ன 50 ரூபாய் கட்டுகளா கொடுத்து திமுக அசிங்க படுத்தி விட்டார்களா. டாஸ்மாகில் எச்சா அதான் வசூல் ஆவுது, என்ன செய்ய.


தாமரை மலர்கிறது
மார் 20, 2025 21:43

மார்ச்சிஸ்ட்டின் இருக்கிற நாலு கம்பியை அகற்றுவதால் ஒன்னும் ஆகிவிடப்போவதில்லை. இது ஒரு கட்சி இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது. அதுக்கு ஒரு கொடி வேறு அவசியமா?


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 20, 2025 20:53

கவலைப்படாதீங்க , பெட்டி கரெக்ட்டா வந்திடும்


Venkatesh
மார் 20, 2025 20:21

என்னடா உண்டியல் குலுக்கி களுக்கு என்ன திடீரென அக்கறை என்று நினைத்தேன்.... இது தான் விஷயாமா?? மானங்கெட்ட கூட்டம்.... மக்கள் பிரச்சினை என்றால் வாயையும் மூடிக்கொண்டு இருப்பார்கள்.... கொடிக்கம்பம் என்றதும் தோழமை சுட்டுகிறார்கள்


vns
மார் 20, 2025 19:48

யாருடைய முதுகிலோ அமர்ந்து சவாரி செய்யும், ஒரு மாநிலத்திலேயும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யாத இந்தியா விரோதி தெருக் கட்சிக்கு எதற்கு கோபம்?


Rajarajan
மார் 20, 2025 19:41

ஆமா, கம்மிகள் தஞ்சாவூரில் ஐயாயிரம் ஏக்கருக்கு சொந்தக்காரர்கள். அப்படியே அறுத்து தள்ளிட்டாலும் ......


KRISHNAN R
மார் 20, 2025 19:37

அவரே எந்த தொனியில் சொன்னார் என்று தெரியவில்லை...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை