உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடை வெயிலில் ஏற்படும் வெப்ப வாதம்; மது, புகை, செயற்கை பானம் தவிருங்கள்

கோடை வெயிலில் ஏற்படும் வெப்ப வாதம்; மது, புகை, செயற்கை பானம் தவிருங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்ப வாதத்தை தடுக்க, மது அருந்துதல், புகைப்பிடித்தல், செயற்கை பானங்களை தவிர்த்தல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றும்படி, மக்கள் நல்வாழ்வு துறை அறிவுறுத்தி உள்ளது.சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், கோடைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பது குறித்த அறிவுறுத்தல் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்குப் பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

கோடைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வெப்ப வாதம் உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க, மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களில் ஈடுபட்டிருப்பவர்கள், அவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். செயற்கை குளிர்பானங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதிக வெப்பத்தால் மயக்கம் ஏற்படுபவர்களுக்கு, அருகில் இருப்பவர்கள் உடனடியாக உதவ வேண்டும். கடும் வெயிலால் பாதிக்கப்படுபவர்களுக்கு, உடலில் மற்றும் தலையில் தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்துதல் அவசியம். பழங்கள், மோர், கேழ்வரகு கூழ், இளநீர், எலுமிச்சைச் சாறு போன்றவை அருந்ததுல் நல்லது.உணவு பாதுகாப்புத் துறை, சுற்றுலா தலங்களில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது. போலி குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் குறித்த தகவல் கிடைத்தவுடன், நடவடிக்கை எடுத்து வருகிறது. கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்கள் பறிமுதல் செய்யப்படும். குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட, 9,000 கடைகள் மூடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை