உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்றும், நாளையும் கனமழை: தென்மாவட்டங்களுக்கு அலெர்ட்

இன்றும், நாளையும் கனமழை: தென்மாவட்டங்களுக்கு அலெர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு பருவமழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:தமிழக வடக்கு கடலோர பகுதியில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, கடலோரத்தில் இருந்து உள் மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது. மேலும், அரபிக்கடலின் தென் கிழக்கில் வளிமண்டல கீழடுக்கில், மற்றொரு சுழற்சி நிலவுகிறது.இதனால், தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.நேற்று காலை வரையிலான காலத்தில், தமிழகம், புதுச்சேரியில், 5 இடங்களில், அதி கனமழையும்; 17 இடங்களில் மிக கனமழையும்; 55 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, சீர்காழியில், 24 செ.மீ., மழை பெய்தது. சிதம்பரம், 23; வேளாங்கண்ணி, 22; திருவாரூர், நாகை, 21; கொள்ளிடம், நன்னிலம், 17; சேத்தியாத்தோப்பு, 15 செ.மீ., மழை பதிவானது.வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக உள்ளது. இன்னும் நான்கு நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும். வடகிழக்கு பருவமழை ஜனவரியில் நிறைவு பெறும். கடந்த, 2018ல் ஜன., 2; 2019ல் ஜன., 10; 2020ல் ஜன., 19; 2021ல் ஜன.,22; 2022ல் ஜன.,12லும் நிறைவு பெற்றது.வடகிழக்கு பருவமழை, 2022ம் ஆண்டில் 44 செ.மீ.., பெய்தது. 2023ம் ஆண்டில், 45 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Seshan Thirumaliruncholai
ஜன 09, 2024 09:06

கர்ம வினை என்பது மனிதனுக்கு மட்டும் அல்ல. நாட்டிற்கும் உண்டு. அதாவது ஆள்பவர்கள். தேவையற்ற மழைபொழிவு நாட்டின் விதி.


Ramesh Sargam
ஜன 09, 2024 07:33

தமிழகத்தில் மழை அலெர்ட் என்றால், உடனே டெல்லி அலெர்ட் ஆகி விடுகிறது. ஆம், நிவாரணம் கேட்டு தமிழகத்திலிருந்து அமைச்சர் முதற்கொண்டு அதிகாரிகள் வரை எங்கே வந்து விடுவார்களோ என்று.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை