மேலும் செய்திகள்
7 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் தகவல்
16-Sep-2025
சென்னை : 'தமிழகத்தில், 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில், ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் 9 செ.மீ., மழை பதிவானது. அரியலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, கடலுார், பெரம்பலுார், கன்னியாகுமரி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில், தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்துார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 12ம் தேதி வரை இது தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
16-Sep-2025