உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று 20 மாவட்டங்கள், நாளை 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 20 மாவட்டங்கள், நாளை 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று (செப் 17) 20 மாவட்டங்களிலும், நாளை (செப் 18) 21 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இடி, மின்னலுடன், மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் இன்றும், நாளையும், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 20 மாவட்டங்களில் இன்று (செப் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (செப் 18)

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 21 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப் 19ம் தேதி

வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் செப் 19ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
செப் 17, 2025 05:40

பஞ்சாப் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பேரழிவால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூகங்களுக்கு உதவுவதற்காக, ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன், ரிலையன்ஸ் ரீடெய்ல், ஜியோ மற்றும் வந்தாராவுடன் இணைந்து ஒரு விரிவான பத்து அம்ச மனிதாபிமான மற்றும் நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமிர்தசரஸ், சுல்தான்பூர் லோதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவி வழங்க, மாநில நிர்வாகம், மாவட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்துகளுடன் இணைந்து அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.


Kasimani Baskaran
செப் 17, 2025 04:18

நீருறிஞ்சும் வண்டிகள் ஏராளம் வாங்கி பணிக்கு அனுப்பிஇருக்கிறதாம் ஊராட்சி அரசு.


முக்கிய வீடியோ