9 மாவட்டங்களில் கன மழைக்கு இன்று வாய்ப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல், கிழக்கு திசை வளி மண்டல அலை காணப்படுகிறது. இதன் காரணமாக, வடக்கு கடலோர மாவட்டங்களில், நேற்று மழை பெய்தது. நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவு பெற்ற, 24 மணி நேரத்தில், சென்னையில், 1 செ.மீ., மழை பதிவானது. இன்று, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வா ய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.