உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் இடிமின்னலுடன் பலத்தமழை

சென்னையில் இடிமின்னலுடன் பலத்தமழை

சென்னை: சென்னையில் நேற்று அக்.,14) நள்ளிரவு முதல் வடபழனி, நுங்கம்பாக்கம், அண்ணாமநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடிமின்னலுடன் பரவலாக மழை பெய்தது.வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதி கனமழை பெய்யும் என்பதால், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் நாளை, 21 செ.மீ.,க்கு மேல் மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகம் முழுதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று இரவு சென்னை , கிண்டி, வேளச்சரி, மடிபாக்கம், ஆலந்தூர், அடையாறு, திருவான்மியூர், சோழிங்கநல்லூர், நுங்கம்பாக்கம், வடபழனி, கீழ்கட்டளை ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்துவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை