உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை; பள்ளி, கல்லூரி மாணவர்கள், பாதிப்பு

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை; பள்ளி, கல்லூரி மாணவர்கள், பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று காலை பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுவடைந்து, தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் நிலவியது. இது, அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைந்து, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, டிச., 23 வரை மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னையில் இன்று காலை முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சேப்பாக்கம், எழும்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அலுவல் நேரத்தில் கனமழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் நனைந்தவாறே, மாணவர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், மேக மூட்டத்தால் போதிய வெளிச்சமின்மை காரணமாக, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி, பொதுமக்கள் தங்களின் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mohamed Irfan
டிச 19, 2024 20:32

மழையை பற்றி சரியான செய்தி வெளியிடவும்


தமிழ்வேள்
டிச 19, 2024 13:27

கிண்டியில் ரோடு காய்ந்து கிடக்கிறது ..எங்கேய்யா மழை ?


பாமரன்
டிச 19, 2024 13:17

வெளுக்கவும் இல்லை வாங்கவும் இல்லை... காலையில் இருந்து இதமான வானிலை தான் சென்னையில்... ஊடகங்கள் பொறுப்பை உணர்ந்து செய்தி வெளியிடனும்... இதை நம்பி பகோடாஸ் ஊட்டுக்குள்ளேயே குந்தியிருக்க போகுதுக...


Mohamed Raffi
டிச 19, 2024 13:02

பொய் செய்தி


Mohamed Raffi
டிச 19, 2024 13:01

மழை பற்றி சரியான செய்தி வெளியிடவும்


Guru
டிச 19, 2024 12:44

கனமழையெல்லாம் பெய்யவில்லை. மிதமான மழைதான்.


sundarsvpr
டிச 19, 2024 11:54

வீதிகளில் தண்ணீர் தேங்கினால் நல்ல மழை என்று கருதக்கூடாது. தெருவில் நீர் ஓட்டம் இருக்கவேண்டும். அதுதான் நல்ல மழை அப்படி ஓடினால்தான் வழித்தடங்கல்களில் அடைப்புகள் இல்லை என்று அறியமுடியும். ஓட்டம் இல்லாமைக்கு இப்போது நாம் கூறும் காரணம் ஆக்கிரமிப்பு.


ponssasi
டிச 19, 2024 11:36

நானும் சென்னையில்தான் மைலாப்பூரில் வசிக்கிறேன், நீங்க சொல்லுற அளவுக்கு மழை வெளுத்துவாங்கவில்லை, சாதாரண மழைதான், எனது குழந்தைகளும் பள்ளிக்கு சென்றுள்ளார்கள் மழையினால் எந்தஒரு பாதிப்பும் இல்லை.


angbu ganesh
டிச 19, 2024 09:49

கொஞ்சம் மழை பெஞ்சாலே சென்னை மக்களை பயமடைய செய்து சென்று விட்டார் ஒருத்தர் அதிலிருந்தே மழை கொஞ்சம் அதிகமா பெஞ்சா சென்னை மக்கள் பயப்படறாங்க, அவங்களுக்கு தெரியல 2015 ஏற்பட்டது செயற்கை பேரிடர் உரிய நேரத்தில நடவடிக்கை எடுக்க தவறியதால் வந்த வினை ஆனா கடவுள் ரொம்ப நல்லவர் சென்னை மக்களை தண்ணி கஷ்டம் இல்லாம பாத்துகிறார் இதுல இப்போதைய ஒருத்தர் அவரலாதன் மதம் மும்மாரி பெய்யுதுன்னு மார் தட்டிக்கிறர்


veeramani
டிச 19, 2024 09:07

ஏம்பா... சென்னை வாசிக்கலே .. வடகிழக்கு பருவ மழை டிசம்பரில் பெயத்தானே செய்யும். இத்தன்னால்தான் சென்னையின் தண்ணீர் டிமாண்ட் நிறைவு செய்யப்படுகிறது. இயற்கையின் மழையை குற்றம் சொல்லவேண்டாம். உனக்கு வேண்டுமானால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டாம். வேலைக்கும் செல்லவேண்டாம்.


சமீபத்திய செய்தி