உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீலகிரி, ஊட்டியில் கொட்டித்தீர்க்கும் கனமழை; மரம் விழுந்து சிறுவன் பலி

நீலகிரி, ஊட்டியில் கொட்டித்தீர்க்கும் கனமழை; மரம் விழுந்து சிறுவன் பலி

ஊட்டி: நீலகிரிக்கு இன்று (மே 25) 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மரம் விழுந்து, 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்வம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் அதிக கனமழை முதல் மிக அதிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. கோவை, நீலகிரிக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=88qrd195&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு சுற்றுலச தலங்கள் மூடப்பட்டு உள்ளது. தொட்டபெட்டா, பைரன் பாரஸ்ட், லேம்ஸ்ராக், சூட்டிங் பாயின்ட், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.ஊட்டியில் 6 இடங்களில் மரங்கள் விழுந்த நிலையில் உடனுக்குடன் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மின்சாரம் தொடர்பான பாதிப்பு இருந்தால் 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். அவசர கால உதவிக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

3 பேர் பத்திரமாக மீட்பு

நள்ளிரவு கூடலூர் ஓவேலி வனச்சரகத்தில் யானை விரட்டும் காவலராக பணியாற்றி வருகிறார் ராஜேஷ். இவர் விடுமுறை பெற்று கேரளா மஞ்சேரியை நண்பர்கள் ஆண்டோதாமஸ், 53, அருண் தாமஸ், 44, ஆகியோருடன், ஓவேலி அண்ணா நகர் - தருமகிரி சாலை வழியாக கூடலூர் நோக்கி காரில் சென்றுகொண்டு இருந்தார். செல்லும் வழியில் ஆற்றைக் கடக்க முயன்ற போது, கார் வெள்ளத்தில் சிக்கியது. மூவரும் தப்பிக்க வழியின்றி, காரின் மீது ஏறி நின்று சத்தமிட்டனர். கூடலூர் நிலைய தீயணைப்பு வீரர்கள், நள்ளிரவு 1:00 மணிக்கு, அப்பகுதிக்கு சென்று, போராடி அதிகாலை 3:30 மணிக்கு மூவரையும் உயிருடன் மீட்டனர்.

மரம் விழுந்து சிறுவன் பலி!

ஊட்டி: ஊட்டியில் கனமழை பெய்து வருவதால் மரம் விழுந்து, 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்வம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையில் இருந்து ஊட்டி நோக்கி வந்த கார் மீது மரம் விழுந்ததில் ஆதிதேவ் என்ற சிறுவன் உயிரிழந்தார். கேரளாவில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா வந்த இடத்தில் துயரம் நிகழ்ந்துள்ளது. அவலாஞ்சியில் 215 மி.மீ., மழைப்பதிவுகடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை விபரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:அவலாஞ்சி- 215எமரால்டு- 94பந்தலூர்- 93சேரங்கோடு- 90தேவாலா- 87அப்பர் பவானி, கூடலூர்-74செருமுள்ளி, ஓவேலி, பாடந்தொரை- 60 கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட், மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மழை தொடர்வதால், படகு சவாரி உட்பட நீர்நிலை சுற்றுலாவுக்கு மாவட்ட நிர்வாகம், மே 27 வரை தடை விதித்துள்ளது.கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே வாளரா பகுதியிலும், போடிமெட்டு, சின்னக்கானல் ரோட்டில் திடீர் நகர் பகுதியிலும் மரம் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது.

கன்னியாகுமரி

கேரளாவில் பருவமழை துவங்கிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதன் தாக்கம் தெரிகிறது. இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இரணியல் அருகே கண்டன்விளையில் காற்றின் வேகத்தில், 150 அடி உயர மொபைல் போன் கோபுரம் சரிந்து, ராஜமல்லி என்பவரது வீட்டின் மீது விழுந்தது.வீடு கடுமையாக சேதமடைந்தது. நித்திரவிளை விரிவிளை மேற்கு கடற்கரை சாலையில் பெரிய வேப்பமரம் முறிந்து விழுந்ததில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திற்பரப்பு அருவி அமைந்துள்ள களியல் பகுதிகளில் ரோடுகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. பூதப்பாண்டி சுற்றுவட்டார பகுதிகளான அருமநல்லுார், சிறமடம், ஞாலம் உள்ளிட்ட பகுதிகளில் 4,000க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன. குலசேகரம் அருகே அண்டூர் சரக்கல்விளை பகுதியில், காற்றில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த ஹோட்டல் தொழிலாளி கிருஷ்ணன், 75, உயிரிழந்தார். ஆற்றுார் ஆனைக்குழி பகுதியில் செல்லையன் 92, என்பவரது வீட்டில் மரம் விழுந்ததில் கூரை சேதமடைந்து செல்லையன் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம்

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை