உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாமின் கோரி ஜாபர் சாதிக் ஐகோர்ட்டில் வழக்கு: விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

ஜாமின் கோரி ஜாபர் சாதிக் ஐகோர்ட்டில் வழக்கு: விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க., பிரதிநிதியாக இருந்த ஜாபர் சாதிக் , அவரின் சகோதரர் இருவரின் ஜாமின் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கூறியுள்ளார்.போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால், கடந்த மார்ச்சில் சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, சகோதரர் முகமது சலீம், திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் மீது, அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் தரப்பில் ஜாமின் கோரி, கூடுதல் சி.பி.ஐ., நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், இருவரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, அமலாக்கத்துறை சார்பில், ஆஜரான வழக்கறிஞர், 'இருவரின் ஜாமின் மனுவை கடந்த 19ம் தேதி மாலை சி.பி.ஐ., நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், அதற்கு முன்பாகவே, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' எனக்கூறினார்.இதனையடுத்து மனு நிலுவையில் உள்ள போது எப்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டது? எனக்கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

ஆரூர் ரங்
டிச 22, 2024 13:06

இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்ற பெயரை முதன்முதலாக கூறியது கருணாநிதி. காவி பயங்கரவாதம் என்ற வார்த்தையை முதலில் உருவாக்கிப் பேசியது பசி . போதை வணிகமும் பயங்கரவாதமும் உடன்பிறவா சகோதரர்கள். திராவிஷ அரசியலுக்கு டானிக்.


jayvee
டிச 22, 2024 12:24

இப்படி வழக்கிலிருந்து விலக சரியான காரணத்தை நீதிபதி தெரிவிக்க வேண்டும்.. இல்லை என்றால் அவர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட வேண்டும்.. அதே போல இந்த வழக்கையும் கேரளா அல்லது ஆந்திர மாநிலத்திற்கு மாற்றவேண்டும்..


Va.sri.nrusimaan Srinivasan
டிச 22, 2024 08:32

.......


Kumar Kumzi
டிச 22, 2024 06:31

தேசப்பற்றத்த இந்துக்கள் தேசவிரோத தீயசக்தி திமுகவுக்கு போடுற ஒவ்வொரு ஓட்டும் ஒரு முஸ்லீம் பயங்கரவாதியை உருவாக்கி தமிழ் நாட்டை சீரழிக்கும்


Selvaraj K
டிச 21, 2024 21:19

நல்லது நீதிபதி செகதீட்சு சந்திரவுக்கு நன்றி வாழ்த்துகள் விச செடிய வக்கீல கிள்ளி எறிந்ததற்க்கு நான் சரிய மனு கொடுத்தும் அதுக்கு நம்பர் கொடுக்காமல் நிலுவையில் வைத்து இருக்குறார்கள். இப்படி தவறுக்கு துணைக்கு போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கனும்


Vijay
டிச 21, 2024 20:14

சூடு சுரணை இல்லாத ஹிந்துக்கள், தங்கள் குடும்ப நலனை மட்டுமே யோசிக்கும் அரசு ஊழியர்கள், மதத்தை தான்டி யோசிக்காத சிறுபான்மையினர், பணத்திற்கு ஓட்டு போடும் கும்பல் இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருக்கும். இதை மாற்றவே முடியாது.


Pillutla Prasad
டிச 21, 2024 19:32

நீதிபதிகள் இவ்வாறு வழக்கிலிருந்து விலகுவது ஏன்?? அது எப்படி அனுமதிக்கப்படலாம்? என்ன தொடர்பு அல்லது அழுத்தம்? தலைமை நீதிபதி இதனை எல்லா கண்ணோட்டங்களுடன் ஆராயவேண்டும்.


அப்பாவி
டிச 21, 2024 19:03

எல்லாம் நம் சட்டங்கள் வழியாத்தான் தாக்கல் செய்யபட்டது யுவர் ஆனர்.


rama adhavan
டிச 22, 2024 00:18

சட்டங்கள் வழியல்ல நண்பா, மனுவை அனுமதிக்கும் பதிவாளர் மனு முறைப்படி உள்ளதா என்பதை மட்டுமே பார்ப்பார். மற்றபடி மனுவில் உள்ள விவரங்களை நீதிபதி மட்டுமே பார்ப்பார். ஆனால் நீதிபதி காரணம் கூறாமல் விலகியது குறித்து அவர்தான் சொல்ல வேண்டும்.


jayvee
டிச 22, 2024 12:25

இங்க ஷரியா சட்டம் இல்லை ..தீவிரவாதிகளுக்கு பாராட்டு தெரிவிக்க


குமரன்
டிச 21, 2024 18:57

இவர்களிடம் வணிகம் நிறுத்தினால் இந்திய மக்கள் நலமாக இருப்பர்


Rpalni
டிச 21, 2024 18:48

மாபியா வர வர எதற்கும் ரெடி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை