உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ நுழைவுவாயில் அமைக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ நுழைவுவாயில் அமைக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ அலங்கார நுழைவுவாயில் அமைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திண்டுக்கல் செந்தில்வேலு தாக்கல் செய்த பொதுநல மனு:திண்டுக்கல் மலைக்கோட்டை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தது. மதுரை நாயக்கர் வம்ச ஆட்சியில் கட்டப்பட்டது. மத்திய தொல்லியல்துறையின் பராமரிப்பில் உள்ளது.அங்கு பழமையான கோயில்கள் உள்ளன. மலைக்கோட்டை மற்றும் மலை உச்சியிலுள்ள குளத்தில் ஆக்கிரமிப்புகள்உள்ளன. குளத்தை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் துாய்மையாக பராமரிக்கவில்லை. குப்பை தேங்கியுள்ளது. இதனால் அதிலுள்ள நீரை மக்கள் பயன்படுத்த முடியவில்லை.மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ அலங்கார நுழைவு வாயில் அமைக்க மாநகராட்சி முயற்சிக்கிறது. இதனால் இதர மதங்களை சார்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். நுழைவுவாயில் அமைக்க தடை விதிக்க வேண்டும். மலைக்கோட்டையை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குளத்தை துார்வார வேண்டும். மலையிலுள்ள கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், தொல்லியல்துறை கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் அமர்வு: மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை கிறிஸ்தவ அலங்கார நுழைவுவாயில் அமைக்கக்கூடாது. கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

panneer selvam
மே 22, 2025 16:37

People should remember what Manmohan ji said while he was PM of India. In India minorities have the first priority . So Trichy Dravidian Party might have advised Trichy Corporation to install an arch at the entrance of Rock Fort bearing Cross at government expense . So let the people will pray Lord Jesus before climbing .


sridhar
மே 22, 2025 16:13

உச்ச நீதிமன்றம் போங்க , தடைக்கு தடை கிடைக்கும் , கபில் சிபல் இருக்காரு ,


S.jayaram
மே 22, 2025 15:16

தமிழ்நாடு அரசு தொடர்ந்து இந்துமத வழிபாடுகளை அவமதிக்கும் நோக்குடன் நடந்து கொள்கிறது. பொது இடத்தில் தனியொரு மத சின்னங்கள் அமைக்க அனுமதிக்க கூடாது.மாநகராட்சியும் தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒரு அங்கம் தான்


Rengaraj
மே 22, 2025 13:57

மாற்று மதத்தை சேர்ந்தவங்க கிட்ட உக்காந்து பேசினா அவங்க நிலைமையை புரிஞ்சு விட்டுக்கொடுக்கறவங்கதான் சார். இந்த பாழாய்ப்போன கட்சிகள், அரசியல்வாதிகள் தங்களுக்கு வோட்டு வேணும்கிறதுக்காக பிரச்சினையை கிளப்பிடுவாங்க சார்.


Ramesh Sargam
மே 22, 2025 13:23

மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ அலங்கார நுழைவு வாயில் அமைக்க மாநகராட்சி முயற்சிக்கிறது. ஒரு மாநகராட்சி எப்படி ஒரு தனிப்பட்ட மதத்திற்கு தனிப்பட்ட முறையில் சலுகை காட்டலாம், தனிப்பட்ட முறையில் உதவி புரியலாம்? ஹிந்துக்கள் எப்பொழுதும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று ஜபம் செய்தால் மட்டும் போதாது. இதுபோன்ற செயல்களை எதிர்க்க கொஞ்சம் துணிவுடனும் இருக்கவேண்டும்.


joe
மே 22, 2025 13:14

No doubt it is very wrong to put an arch in the holy place of other's faith. A true Christian won't do this only so called crypto Christian's alone wolf do these kind of unnecessary things and problems like this


Tetra
மே 22, 2025 12:45

கவலையில்லை. உச்ச நீதிமன்றம் இருக்கிறது. உடனே தடை விதிக்க


ஆரூர் ரங்
மே 22, 2025 11:13

இயேசு யூதர் என்றாலும் அவர் வாழ்ந்த இஸ்ரேலில் கிறித்தவம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இயேசு அவரது காலத்தில் எந்த மதத்தையும் தோற்றுவித்ததாகத் தெரியவில்லை. இங்குள்ள வாக்கு வங்கி கும்பல்தான் ஆர்ச் கட்டுகிறார்கள்.


Natchimuthu Chithiraisamy
மே 22, 2025 11:00

கொஞ்சமாவது இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தி முக அரசை பற்றி. வெளிநாட்டு பணம் வருகிறது கமிஷன் செட்டில் ஆகிறது. யார் என்ன செய்ய முடியும்


James Mani
மே 22, 2025 11:32

சங்கி


ஆரூர் ரங்
மே 22, 2025 10:57

இயேசு யூதர் என்றாலும் அவர் வாழ்ந்த இஸ்ரேலில் கிறித்தவம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இயேசு அவரது காலத்தில் எந்த மதத்தையும் தோற்றுவித்ததாகத் தெரியவில்லை. இங்குள்ள வாக்குவங்கி கும்பல்தான் ஆர்ச் கட்டுகிறார்கள்.